�பாதிப்பு 911: இறப்பு 9: மூன்றாம் கட்டத்திற்கு செல்லவில்லை- தலைமைச் செயலாளர்

தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு  கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் மாலை  வைரஸ் தொற்று தமிழகத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை முதலில்  சுகாதாரத்துறை அமைச்சர்  விஜய பாஸ்கரும் பின்பு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும்  தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 10) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து இதுபற்றி விவரங்களை விளக்கினார்.

இதன்படி இன்று வரை 911 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்டத்தில் தான் இருப்பதாகவும் மூன்றாம் கட்டத்துக்கு இன்னும் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இன்று தொற்று ஏற்பட்டுள்ள 77 பேரில் எல்லாருமே வெளிநாடு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும்,   தூத்துக்குடியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 22 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பெண் ஒருவர் பலியாகியிருக்கிறார் என்றும், இதன் மூலம் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.

144 தடை நீட்டிப்பு குறித்து தெரிவித்த அவர், பிரதமர் உடனான ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்த முடிவை முதல்வர் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

**-வேந்தன்**

�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts