a
கனமழை எதிரொலியாக சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்ல 5ஆம் தேதி வரை அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. வழக்கமாக அமாவாசை, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில் வத்திராயிருப்பு மற்றும் சதுரகிரி, சாப்டூர் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று (நவம்பர் 2) பிரதோஷம் மற்றும் நவம்பர் 4ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும், வனத்துறையினர் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழக்கம்போல் நடைபெறக்கூடிய சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும் எனவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை வனத் துறை கேட் முன்பு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,