இடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காலியாக இருக்கும் காமராஜர் நகர் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் நாராயணனும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி வேட்பாளரை அறிவிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத் தவிர்த்து மற்ற முக்கிய கட்சிகளான அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட அறிவிப்பில், “விக்கிரவாண்டி தொகுதியில் சமூகச் செயற்பாட்டாளர் கு.கந்தசாமியும், நாங்குநேரியில் இளங்கலை வரலாறு படித்துள்ள சா.ராஜநாராயணனும், காமராஜர் நகர் தொகுதியில் அக்குபஞ்சர் மருத்துவப் பட்டயப் படிப்பு முடித்துள்ள பிரவினா மதியழகனும் போட்டியிடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இவர்கள் மூவரும் விரைவில் மனுத் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
�,