இந்திய சமையலைறைகளில் தவிர்க்க முடியாத ராணியான வெங்காயத்தின் விலை உயர்வு, தேசத்தின் பணவீக்கத்தையும் அசைத்துப் பார்த்திருக்கிறது.
ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்திய சில்லறை வர்த்தக பணவீக்கம் கடந்த 12 மாதங்களை விட, செப்டம்பர் மாதத்தில் தான் அதிகளவில் பணவீக்கம் எட்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தாண்டு எதிர்பார்த்ததை விட நீடித்த பருவமழை, அறுவடையை தாமதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விநியோகத்தையும் தடைசெய்தது. இது கடந்த செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்கத்தை அதிகமாக்கியது.
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை மத்திய அரசு ரத்து செய்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு செய்ததைப் போல, வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு இதனைக் கடைபிடித்தது.
அக்டோபர் மாத முதல் வார வாக்கெடுப்புகளில், 40 க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் ஆண்டு நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இது கடந்த ஒரு வருடத்தை ஒப்பிடும் போது, மிக உயர்வாகும்.
இந்த பொருளாதார வல்லுநர்களின், ஒருமித்த கருத்து சரியாக இருந்தால், ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கை விட பணவீக்கம் இனி வரும் மாதங்களில் குறைவாகவே இருக்கும். வரும் அக்டோபர் 14 ஆம் தேதி, பணவீக்கம் குறித்த தகவல்கள் முழுமையாக வெளிவரவுள்ளன.
மூத்த இந்திய பொருளாதார நிபுணர் ஷிலான் ஷா இது குறித்து கூறும்போது, “செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை உயர்வின் பின்னணியில் நுகர்வோர் பணவீக்கம் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், இது ரிசர்வ் வங்கியின் கண்களில் கண்ணீரை வரவழைக்காது. ஏனெனில், ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கின்றது” என்று கூறினார்.
இந்த ஆண்டு, பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவை ரிசர்வ் வங்கியின் 135 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. பணவீக்கத்தால் கடந்த வாரம் மட்டும், 25 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
�,