02.0 தள்ளிப் போகிறதா?

Published On:

| By Balaji

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்பதால், கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருவதாக இருந்து பின் ஜனவரி 25, 2018-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ‘2.0’ கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய இன்னும் அதிக நாள்கள் பிடிப்பதால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இந்த தகவலை லைக்கா நிறுவனம் மறுத்துள்ளது.

இது குறித்து லைக்கா நிறுவனம் சார்பில் கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாவதால் தான் தீபாவளி வெளியீட்டிலிருந்து ஜனவரி வெளியீட்டுக்கு மாற்றினோம். ஜனவரி 25 வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும்” என்று தெரிவித்துள்ளது. மேலும் இறுதிப்பாடல் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளது. 12 நாட்கள் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது.

ரூ.400 கோடி பொருட்செலவில் தயாராகும் 2.0 வில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். அக்‌ஷய்குமார் இந்த படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share