�சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திரு ஓணம் : ஓணம் ஆஷம்ஸ்கள்

public

இன்று பெரும்பாலானவர்களின் நண்பர்கள் பட்டியல் தேடல் “நம்ம லிஸ்ட்-ல மலையாள ஃப்ரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா” என்பதுதான் ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து மெசேஜ்-ம் அனுப்ப ஆரம்பித்தாகிவிட்டது.

அதிலும், ஆண்களுக்கு “ஏண்டா..அத்தப்பூ கோலம்ன்னு வச்சாய்ங்களே..சித்தப்பு கோலம்ன்னு ஏதாச்சும் வச்சீங்களாடா.. என்னவோ போடா மாதவா.. ஹாப்பி ஓணம்”. என்றும்,

பெண்களுக்கு “ஏ..சேச்சி.. நிங்கள் இவ்வருஷம் கூட அழகாயிட்டு உண்டு. ஹாப்பி ஓணம்” என அரைகுறையாக அரைத்த மசாலா மலையாளத்தில் வாழ்த்யிதிருப்பர்.

விளக்கின் திரியை தூண்டிவிட்ட புண்ணியத்தால் மறு பிறவியில் அரசனாகப் பிறந்து, கேரளப்பகுதியை ஆட்சி செய்து, தானம் தர்மம் அருள் கொடை என செய்வதில் தனக்கு மிஞ்சியவர் எவருமில்லை என்ற தன் செருக்கை அழித்திட, மஹாவிஷ்ணுவே வாமன அவதாரம் கொண்டு மூன்றடி மண்கேட்டு மஹாபலியை அழித்திட்ட வரலாற்றை முழுவதும் படிக்க நேரமின்றி, அப்படியே ஃபார்வேர்டு செய்திடும் அதிவேகப்புலிப்பாண்டிகளை நாம் கடந்துதான் வருகிறோம்.

ஒவ்வொரு வருடமும் ஆவணிமாதம் திருவோண நட்சத்திரத்தன்று மஹாபலி சக்ரவர்த்தி, பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வந்து, மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என பார்க்க வருவதாக ஐதீகம். அதன் பொருட்டே பத்து நாள் உற்சவமாக, கோலாகலமாக உலகமெங்கும் ஓணம் கொண்டாடப்படுகிறது என்ற வரிகளை படித்துக்கொண்டிருக்கும்போதே, “ பத்துன்னதும் தான் நியாபகத்துக்கு வருது, இந்த மாசம் பத்தாம் தேதி ஞாயித்துக்கிழமை வருது. அப்படின்னா சம்பளம் சனிக்கிழமையே போடுவாங்களா இல்ல, திங்கட்கிழமைதான் போடுவாங்களா?, என தொலைநோக்கு தொட்டப்பெட்டாவாக யோசிப்பவர்களே அதிகம்.

“மலையாளி பொண்ண கரெட் பண்ணிருவோம்னு ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து எல்லாம் சொல்லிட்டு தான் இருக்கேன் கடைசி வரைக்கும் ஓணம் மட்டும் தான் வந்துபோகுது” எனவும்,

காமெடி சேனல்களுக்கு போன் செய்து, தன் கனவுக்காதலிகளின் பெயர்களைசொல்லி முத்து படத்தின் ‘இருக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ ‘ காமெடியை டெடிகேட் செய்த வண்ணம் கதகளி ஆடுகின்றனர் நம் இளைஞர் பெருமக்கள்.

நம்ம ஆபீஸில் இன்று பூணம் சாரி கட்டிக்கொண்டுதான் பலரும் வந்திருக்கிறார்கள். ஓணம் சாரி கட்டிக்கொண்டு செல்பவர்களைப்பார்க்க ஒரு மணி நேரம் முன்னதாக கிளம்ப பர்மிஷன் கேட்டபடி லைனில் நிற்கிறார்கள் பலர். ( யோவ்வ்வ் தள்ளாதீங்கய்யா…)

எதுஎப்படியோ, எல்லா சேட்டா & சேச்சிகளுக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் #HappyOnam

#ஓணம்ஆஷம்ஸ்கள்

*கிரேஸி கோபால்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *