வேலை உருவாக்கம்: இந்தியாவின் நிலை!

public

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நாடுகளில் முதல் ஆறு இடங்களில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின்படி, உலக நாடுகள் யாவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்குக் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. 2017ஆம் ஆண்டு கணக்குப்படி இத்துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.3 விழுக்காடு வேலைவாய்ப்புகள் கூடுதலாக இத்துறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அபுதாபியில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் மே 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ’2017ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் சோலார் துறையில்தான் அதிகமானோர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் 34 லட்சம் பேர் சோலார் துறையில் பணிபுரிகின்றனர். இதில் சீனாவில் பணிபுரிபவர்கள் மட்டும் 24 லட்சம் பேர். இந்தியாவில் 1,64,00 பேர் பணிபுரிகின்றனர். ஆசிய அளவில் இந்தியாவும், சீனாவும் சோலார் துறைகளில் 60 சதவிகித வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ளன. உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் 70 விழுக்காடு வேலைகளை வழங்கியுள்ள நாடுகளாக பிரேசில், சீனா, அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகியவை உள்ளன’ என்று கூறியுள்ளது.

இதன்மூலம் இத்துறையில் அதிக வேலைவாய்ப்பை வழங்கியுள்ள உலகின் முதல் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு இந்தியா செயல்பட்டு வருகிறது. இதில் 100 கிகா வாட் சோலார் மூலமும், 60 கிகா வாட் காற்றாலைகள் மூலமும், பயோமாஸ் மூலம் 10 கிகா வாட்டும், சிறிய நீர் மின் நிலையங்கள் மூலம் 5 கிகா வாட்டும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *