]வீடு வாங்குவோருக்குப் பாதுகாப்பு!

public

திவாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து வீடுகளை வாங்கியவர்களுக்கு ‘கடன் வழங்கியவர்’ என்ற அந்தஸ்தை வழங்கும் நோக்கிலும், அவர்களின் முதலீடுகளைக் காக்கும் விதமாகவும், திவால் சட்டத்தை திருத்தியமைக்க அவசரச் சட்டம் கொண்டுவருமாறு ஜூன் 6ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த அவசரச் சட்டத்தின் மூலம் வீடு வாங்கியவர்களுக்குக் கடன் வழங்கியவர்கள் கமிட்டியில் இடம் கிடைக்கும். மேலும், திவாலான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் எதிர்காலத் தீர்மானங்களைத் திட்டமிடுவதிலும் அவர்களுக்குப் பங்கு கிடைக்கும். கடன் வழங்கியவராக அந்தஸ்து பெறுவதன் மூலம் வீடு வாங்கியவர்களால், தவறிழைக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடு வாங்கியவர்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை 2017 ஆகஸ்ட் மாதம் முதலாகவே வீடமைப்பு மற்றும் கார்பரேட் விவகார அமைச்சகங்கள் ஆராய்ந்து வருகின்றன. ஜெய்ப்பீ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது திவால் சட்டத்தைப் பயன்படுத்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் அனுமதியளித்த பிறகு, ஜெய்ப்பீ நிறுவனத்திடமிருந்து வீடு வாங்கிய ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதன்பிறகு, வீடு வாங்குபவர்களைக் காக்க அரசு பல்வேறு வழிகளை ஆராய்ந்து வந்தது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *