மாவோயிஸ்ட்டுகள்: கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்!

public

.

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலைக் கண்காணிக்க காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், மஞ்சூர் போன்ற பகுதிகள் தமிழக-கேரள எல்லைகளாக உள்ளன. கேரள மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால், அவர்கள் தமிழக எல்லைக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோதனைச் சாவடிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸார் ரோந்து பணியிலும், 12 சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நான்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவலைக் கண்காணிக்க காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியிலிருந்து நீலகிரிக்குள் மாவோயிஸ்ட்டுகள் வர வாய்ப்புள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மசினகுடி, சோலூர், தேவாலா, சேரம்பாடி உள்ளிட்ட 12 காவல் நிலையங்களிலும், முக்கிய சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *