புதுவை பந்த் தொடர்பாக நீதிவிசாரணை : ஆளுநர் உத்தரவு!

public

புதுச்சேரியில் கடந்த 8 ஆம் தேதி ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற பந்த் போராட்டம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

கிரண்பேடி ஆளுநராக பொறுப்பேற்றது முதல் புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக பாஜக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் 3 பேரை ஆளுநர் பரிந்துரையின் பேரில் தன்னிச்சையாக மத்திய அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி கடந்த 8 ஆம் தேதி முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கிரண்பேடி வாட்சாப்பில் வெளியிட்டுள்ள 8 கேள்விகள் கொண்ட அறிக்கையில்,’பந்த் போராட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் அறிக்கைக்கும், ஊடகங்கள், நாளிதழ்களில் வெளிவந்த தகவல்களுக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. இதுதொடர்பாக நீதித்துறை நடுவர் (மாஜிஸ்டிரேட்) அளவிலான நீதி விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் அறிக்கையில் 8 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

1. பந்த் நடைபெற்ற அன்று பதிவான மற்றும் பதிவாகாத வன்முறைச் சம்பவங்கள் எத்தனை?

2. வன்முறைகளைத் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

3. காவல்துறை அதிகாரிகளின் செயல்திறன், பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க காவலர்கள் நிறுத்தப்பட்டார்களா?

4. வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோர் மீது சரியான குற்றப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டனவா?

5. சமூக அமைதி சீர்குலைப்பு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக, உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா?

6. வன்முறைச் சம்பவங்கள், நீதிமன்ற ஆதாரத்துக்காக வீடியோ காட்சியாகப் பதிவுசெய்யப்பட்டதா?

7. பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதிலும் சமூக அமைதியை நிலைநாட்டுவதிலும் தாலுகா நடுவர், துணை மாவட்ட நீதிபதி ஆகியோரின் பங்கு என்ன?

8. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான செயல்திட்டம், அனுபவப் பாடங்கள் என்ன ?.

இவை குறித்து விசாரித்து 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். இதுகுறித்து,’ நியமன எம்.எல்.ஏ-க்களின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் கூறுகையில்,’ 3 நியமன எம்எல்ஏ-க்கள் தொடர்பாக கோப்புகளை திருத்தும் முயற்சியில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார். தீர்ப்பு அரசுக்கு சாதகமாக கிடைக்கும் என்பதால் அவர் டெல்லி சென்று கோப்புகளை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ‘ என்று தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *