நுங்கம்பாக்கத்தில் பேருந்து விபத்து: பயணிகள் காயம்!

public

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படமால் இருப்பதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருவது அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் அன்றாடம் பேருந்து மற்றும் ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் மாநகர அரசுப் பேருந்து விபத்தில் சிக்கி பயணிகள் பலர் காயமடைந்தனர். நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து, ஹாடோஸ் சாலை வளைவில் திரும்பியபோது ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். பெருந்து மிதமான வேகத்தில் சென்றதால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள், ‘அரசுப் பேருந்துகள் பழுது ஏற்படும்போது உடனுக்குடன் சரி செய்யப்படுவதில்லை. இதனால், உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. மாநகரப் பேருந்துகள் திடீரென பழுதாகி நிற்கும்போது பணிக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குவதற்குமுன் அதிலுள்ள பழுதுகளை சரிபார்ப்பதில்லை. இதனால், அடிக்கடி பேருந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, பேருந்துகளை முறையாகப் பராமரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *