நல்லவேளை மினிஸ்டருக்கு அட்மின் இல்லை -அப்டேட் குமாரு

public

உலக தூக்க தினம் அன்னைக்குத்தான், இந்தத் தூக்கம் ரொம்ப ஹெவியா வருது. பாட்டு கேக்குறா மாதிரி கண்ணசந்தாலும் மாட்டிக்குவோமேன்னு பானி பூரி சாப்பிடலாம்னு போனேன். நார்த் இண்டியன் பையன் சும்மா சொல்லக்கூடாது, நல்லா பானி பூரி சுடுவான். நான் பேச்சு குடுக்குறதுக்கு முன்ன அவனே ஸ்டார்ட் பண்ணான். என்ன பாஷ், உங்க பொல்டீஷியன் ஒரு பொண்ணை அழ்கா இருக்கன்னு சொல்லிர்க்கார். நீங்க மோடி ஜி பார்ட்டியை கிண்டல் பண்றீங்களே அப்படின்னு கேட்டான். எங்க அமைச்சர் பரவாலடா தம்பி பையா சட்டுனு சீரியஸ் புரிஞ்சு மன்னிப்பு கேட்டுட்டார். நார்த் பெங்களூர் முன்னாள் எம்.பி எச்.டி.சங்கிலியா, வுமன்ஸ் டே அன்னைக்கு நிர்பயா அம்மாவுக்கு சிறந்த பெண் செயல்பாட்டாளர் விருது கொடுத்துட்டு, ‘நீங்களே இவ்வளவு அழகான உடலமைப்போட இருக்கீங்களே, உங்க பொண்ணு எவ்வளவு அழகா இருந்திருப்பாங்க? பொதுவாவே இந்த மாதிரி பிரச்சினை வந்தால், ரொம்ப எதிர்த்து போராடி உயிரை விட்டுடாதீங்க. அதிக பலம் கொண்டவங்க கிட்ட சிக்குனா அமைதியா இருந்துடுங்க. நாம அவங்களை கோர்ட்ல கேஸ் போட்டுட்டு பார்த்துக்கலாம்’ அப்படின்னு சொல்லியிருக்காரே அது தெரியுமா உனக்கு. இதுக்கு மன்னிப்பு கேட்டாரா அந்த பி.ஜே.பி ஆளு. அவர் சொன்னதை செய்தியா கூட மக்கள்கிட்ட தெரிவிக்காத வட இந்திய ஊடகங்கள் தான் இன்னைக்கு தமிழக அமைச்சர் மன்னிப்பு கேட்டதை பிரேக்கிங் நியூஸ்ல போட்டுக்கிட்டு இருக்கீங்க. இன்னும் ஒரு நாள் விஜயபாஸ்கர் லேட் பண்ணிருந்தா அவர் நிலைமையே வேற மாதிரி ஆகியிருக்கும்னு சொன்னேன். ஜி, பானி பூரி காரமா போடவா? ஸ்வீட்டா போடவான்னு சட்டுனு வேலைக்கு வந்துட்டான். இப்படித்தான், அதிமுகவை வெச்சு அவன் என்னை அசிங்கப்படுத்துறது, பிஜேபி-யை வெச்சு அவனை நான் அசிங்கப்படுத்துறதும், எங்களுக்கு வழக்கம். ஆனா, அதுக்காக விஜயபாஸ்கர் பண்ணது தப்பில்லை; ஏன்னா இதோ உங்காளும் பண்ணிருக்காருன்னு சொல்ல வரல. ரெண்டு மினிஸ்டர் பண்ணதும் தவறு என்று இந்த அப்டேட் மன்றம் தீர்ப்பளிக்கிறது. இதன் மூலமாக சொல்லவரும் நீதி என்னன்னா, வாயத் தொறந்தா இப்படி ஏதாவது அசால்ட்டு பண்ணுவாய்ங்கன்னு தான் ஜெயலலிதா இருந்தவரைக்கும் ஒருத்தரையும் மீடியாகிட்ட பேசவே விடல. அவங்க இல்லாத குறை இதுல தான் தெரியுது. இவங்க லட்சணமும் இதுல தான் தெரியுது. அப்டேட்டைப் படிச்சிக்கிட்டே இருங்க. நான் போய் ஸ்பெக்ஸை வித்துட்டு, காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கிட்டு வர்றேன்.

**காளையன்**

கதவுகள்

பூட்டப்பட்டிருந்தாலும்

கனவுகள்

தீட்டப்பட்டிருந்தால் போதும்..

**JKK **

மத்திய அரசு சொல்வதையைல்லாம் கேட்டு ஆடமுடியாது-ஜெயக்குமார்

அழாதண்ணே, கொஞ்சம் ஈஸியான ஸ்டெப்பா சொல்லுங்கயா..

எங்கண்ணேபீல் பண்ணுறாருல்ல

** ✍கிரியேட்டிவ் ЯΛJ ™**

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

அப்டி என்ன பாட்டுக்கு டான்ஸ் ஆட சொன்னாங்க தல

**கார்த்திக் தமிழன்**

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்”

புதிய அமைப்பின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார் டி.டி.வி தினகரன்!

பாஸ் சின்னம்மாவா இல்ல பெரியம்மாவா?? பாஸ்

**Sundhra Gajendiran**

நான் சிரித்தேன், மொபைல பாத்து சிரித்தாள்..

முறைத்தேன்,மொபைல பாத்து முறைத்தாள்..

அழுதேன்,மொபைல பாத்து சிரித்தாள்..

பக்கத்துல போனா தான் தெரியுது அவ செல்பி எடுக்கறான்னு ….

**யுவி **

“மறதி” நமது தேசிய வியாதியாக ஆகபோகிறது.

காரணம்-தொழில்நுட்பங்கள் நம் நினைவு திறனை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.

**ஏகே ராஜ்**

பொருட்களை பயன்படுத்துங்கள், நேசிக்காதீர்கள்..

மனிதனை நேசியுங்கள், பயன்படுத்தாதீர்கள்…

**Indupriya**

உள்ள இருக்க வரைக்கும் மோடமா இருக்கும்

வெளிய கிளம்புனதும் சுட்டெரிக்கற மாதிரி வெயில் அடிக்கும்

மொத்த வாழ்க்கைக்குமான டிஸைன் ல ஒரு சாம்பிள் தான் இது …

**ச ப் பா ணி**

மீண்டும் பிறந்தால் யாராக பிறக்க ஆசை? ‘குழந்தையாக’

-சுஜாதா

**தமிழினி**

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

அதான தலையாட்டி பொம்மைய எதுக்கு ஆட வைக்கனும்…?

**Umamaheshvaran Panneerselvam**

ஆந்திராவோ, கேரளாவோ,

கர்நாடகாவே, தெலுங்கானோவோ தமிழ்நாட்டுடன் நிற்பது முக்கியம் இல்லை.

நாளை தனி திராவிட நாடு அமைந்தால் பாண்டிச்சேரி இருந்தே ஆகவேண்டும்..

தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டினர் ஏற்கிறார்களோ இல்லையோ, பாண்டிச்சேரியத்தை ஏற்காதவர்களே கிடையாது. எதிர்த்தாலும் வெளிப்படையாக எதிர்க்கவும் முடியாது.

**Khaja Mohideen**

எலே எப்பா இங்க வா.. நீ என்ன படிச்சிருக்க..??

தெலுங்கு..

நீ திராவிட நாட்டுக்கு ஓடு..

ஏலேய் நீ என்ன படிச்சிருக்க..

தமிழ்..

நீ அந்த மாட்டை பூராம் புடிச்சி கட்டு.. உனக்கு சம்பளம் மாசம் 20000 ருபாய்..

**Karl Max Ganapathy**

ஹெல்த் மினிஸ்டர்னா, நீங்க நல்லா ஆரோக்கியமா இருக்கீங்கம்மா… இதையே மைண்ட்டைன் பண்ணுனீங்கன்னா எங்க ஆட்சிக்கு பெரும… அப்படிதான சொல்லிருக்கனும். அதான டீசன்டு… கவுரத…!

**Vairam Sivakasi**

மாமா 2000 ரூவாய்க்கு நாலு சுடிதார் எடுத்துக்கவா?

2000 தானே எடுத்துக்கோ..

அப்றந்தான் தெரியுது ஒவ்வொன்னும் 2000.. அடியேய்..

**Shan Karuppusamy**

நம் மண்ணின் தெய்வங்களை ‘சிறு’ தெய்வங்கள் என்று அழைப்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது.

**எஸ்.சேக் சிக்கந்தர்**

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது தெலுங்கு தேசம் – சந்திரபாபு நாயுடு

இனிமேல் இப்டிதான் ஒவ்வொரு விக்கெட்டா காலியாகும்.

*சேட்ட**

இவ்வுலகில் எது சிறப்பானது

என தேடாதே……!

உன் காலை இன்று வரை பாதுகாத்து வரும்

செருப்பு கூட சிறப்பு தான்…

**ஜாக்‌ஷன் துரை**

என்னை பற்றி தெரிய வேண்டுமானால் என்னிடமே கேள்…

என் நண்பனிடம் கேட்காதே…

பொறாம புடுச்சவனுக ஒரு புள்ளகிட்ட கூட நல்லபடியா எடுத்து சொல்லவே மாட்றானுக…

**SKP KARUNA**

நம்ம திராவிடநாட்டுலே பாண்டிச்சேரியை சேர்க்கக்கூடாது. (அவங்களும் சேர மாட்டாங்கங்கிறது வேற விஷயம்!). ஆனா நம்ம ராணுவத்தளபதி வைகோ(!) வை விட்டு அதைக் கைப்பற்றி பழையபடி ஃப்ரான்ஸுக்கே கொடுத்திடணும். நம்மை ஒட்டினாப்லே ஒரு வல்லரசு இருக்கிறது நமக்கு நல்லது. – வெளியுறவுத்துறை ஐடியாக்கள்.

**ஆல்தோட்டபூபதி**

5 மாநிலத்துக்கு 3 ஐபிஎல் டீம் வச்சிருக்கோம், கோலி தோனி இங்கன தான் இருக்காய்ங்க, பேசாம திராவிடநாடு போயிடலாம்

**Vadivel Paramasivam**

மறைந்து போன திராவிட நாடு முழக்கத்தை மீண்டும் எழச் செய்தது மட்டுமே மோடியின் சாதனை.

மற்றபடி வேதனையே!!

**Karthick Papilio Yehoshuah Muhammed**

இந்நேரம் அமரர் ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் அமைச்சர் விஜய பாஸ்கர் ஊடகத்திடம் பேசியே இருந்திருக்க மாட்டார்

பேசி இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார்.

-லாக் ஆஃப்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *