>தினம் ஒரு சிந்தனை: மனம்!

public

மனம் சொர்க்கத்தை நரகமாகவும், நரகத்தைச் சொர்க்கமாகவும் மாற்றும் தன்மையுடையது.

– ஜான் மில்டன் (9 டிசம்பர் 1608 – 8 நவம்பர் 1674). புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர், உரைநடை போதகர், அரசு ஊழியர். கிரேக்கம், லத்தீன், இத்தாலி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவர். 1940ஆம் ஆண்டு இங்கிலாந்தில் புரட்சி வெடித்தது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் எழுந்தன. அப்போது மன்னர் ஆட்சிக்கு எதிராகப் பல கட்டுரைகள் எழுதினார். முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அப்போது, இவரது பார்வை பாதிக்கப்பட்டது. கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கக் கூடாது என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் பார்வை முற்றிலுமாக பறிபோனது. எனினும் இவர் தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மன்னராட்சியை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தார். ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்னும் காவியத்தைப் படைத்தார். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாக விளங்குகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *