தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் அனுமதியில்லை: தர்மேந்திர பிரதான்

public

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, கடந்த ஜூன் 23ஆம் தேதி மரக்காணம் தொடங்கி மிகப் பெரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது. அதற்குப் பிறகும் பல கிராமங்களில் இன்றுவரை போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களவையில் நேற்று (ஜூலை 15), திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழகத்தில் ஏற்கெனவே இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஏழு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தால், சுற்றுச்சூழலுக்கோ, விவசாயத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியவர், “தமிழகத்தில் தற்போது வரை எந்த இடத்திலும், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை” என விளக்கமளித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *