சிறப்புக் கட்டுரை: விவசாயக் குடும்பங்களின் அவலநிலை!

public

Dr.R.ருக்மணி

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்திக் காட்டுவேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி ஏறிய பாஜக. அரசின் காலத்தில், சராசரி வருமானத்தின் அளவுக்குக் கடனும் இருக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கும் நிதர்சனமான நிலையை அரசாங்கத்தின் NABARD கணக்கெடுப்பு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்தி செலவைவிடக் கூடுதலாக 50 விழுக்காடு வழங்குகிறோம் எனவும் உரத்துக் குரலெழுப்புகின்றனர் பாஜகவினர். என்னதான் நடக்கிறது நாட்டில்? விவசாயிகளின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பது குறித்த [All India Rural Financial Inclusion Survey Report-2018](https://www.nabard.org/auth/writereaddata/tender/1608180417NABARD-Repo-16_Web_P.pdf) என்ற இந்த அறிக்கையின் சாரத்தை *The Hindu* 20.08.2018 அன்று வெளியிட்டுள்ளது.

விவசாய மற்றும் கிராமிய வளர்ச்சிக்கான தேசிய வங்கி நிறுவனம் (NABARD) 2016-17ஆம் ஆண்டு, இந்தியாவின் கிராமப் பகுதிகளில் வாழும் குடும்பங்களின் நிதி நிலைமையைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. இதற்காக, இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் 40,327 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகளை NABARD நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் அவலமான நிதி நிலைமையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. இந்த ஆய்வின் முக்கியமான முடிவுகள் பின்வருமாறு:

1. இந்தியாவின் கிராமப்புறங்களில் சராசரியாக ஒரு 100 குடும்பங்களுக்கு, 48 குடும்பங்களை மட்டும்தான் விவசாயக் குடும்பங்கள் என்று வரையறுக்கலாம். அதாவது, சராசரியாக 100இல் 48 குடும்பங்களில் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு நாளாவது விவசாயத்தை சுயதொழிலாகச் செய்வதன் மூலம் ரூ.5000க்கு குறையாமல் வருடாந்திர வருமானம் ஈட்டுகின்றனர். மீதமுள்ள 100இல் 52 குடும்பங்களுக்கு முக்கிய வருமானம் விவசாயம் இல்லாத மற்ற தொழில்களிலிருந்து வருகிறது.

2. விவசாயத்தைச் சார்ந்திருக்கும் குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 52 சதவிகிதக் கடனாளி குடும்பங்களாக உள்ளன. அதாவது, சராசரியாக 100இல் 52 குடும்பங்கள் கடன் பெற்றிருக்கின்றன.

3. இந்தக் கடன் பெற்றிருக்கும் விவசாயக் குடும்பங்களின் சராசரிக் கடன் அளவு, அவர்களின் வருடாந்திர சராசரி வருமானம் அளவுக்கு உள்ளது. சராசரியாக, 2016-17ஆம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தின் கடன் ரூ.1,04,602 என மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக, விவசாயக் குடும்பங்களின் வருமானம் ரூ.1,07,000 ஆகும். அதாவது, சராசரி வருமானம் கடனை விடச் சிறிதளவே அதிகமாக உள்ளது.

4. விவசாயமற்ற இதர தொழில்களைச் சார்ந்திருக்கும் கிராமப்புற குடும்பங்களில் 100இல் 42 குடும்பங்கள் கடன் பெற்றிருக்கின்றன. அதாவது விவசாயத்தைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை விட விவசாயத்தைச் சார்ந்திராத குடும்பங்களில் கடனாளி குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேலும் இந்த விவசாயம் சாராத குடும்பங்களில் சராசரிக் கடனளவு 2016-17ஆம் ஆண்டு ரூ.76,731 ஆகும். இது விவசாயக் குடும்பங்களின் கடனளவை விடக் குறைவானது.

5. மொத்தமுள்ள விவசாயக் குடும்பங்களில் பத்தில் ஒரு குடும்பத்தில்தான் KISSAN CREDIT CARD எனப்படும் அரசினால் வழங்கப்படும் விவசாயிகளுக்கான கடன் அட்டை உள்ளது. விவசாயிகள் அரசாங்கப் பொது வங்கிகளிடம் கடன் பெற இந்த அட்டை கைவசம் இருப்பது அவசியம். ஆக, பத்தில் ஒரு விவசாயிதான் பொது வங்கிகளில் கடன் பெறுவதற்கான தகுதியுள்ள கடன் அட்டை வைத்துள்ளார்.

6. விவசாயிகளுக்கான கடன் அட்டைகளை உபயோகித்து கடன் பெற்ற விவசாயிகளில் பெரும்பாலானோர் 39 சதவிகிதம் விவசாயத்திற்கான மூலதனச் செலவுக்காகக் கடன் பெற்றிருக்கின்றனர். 12 சதவிகித விவசாயிகள் மருத்துவச் செலவுக்காகக் கடன் பெற்றிருக்கின்றனர்.

7. அதிகளவு விவசாயக் குடும்பங்கள் கடன் பெற்றிருக்கும் மாநிலங்களாக தெலங்கானா (79%), ஆந்திரா (77%), கர்நாடகா (74%) ஆகியவை உள்ளன.

8. விவசாயக் குடும்பங்களின் மொத்தக் கடனளவில் 40 சதவிகிதக் கடன், குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வட்டி கடைக்காரர்களிடமிருந்து பெறப்பட்டது. 10 சதவிகிதக் கடன், சுயஉதவிக் குழுக்களிடமிருந்தும், 46 சதவிகிதக் கடன் மட்டுமே பொது வங்கிகளிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளது.

இந்திய விவசாயியின் நிலைமை இப்படியிருக்க, இவர்கள் வழங்குவதாக அறிவித்துள்ள விலைகளினால் இந்த விவசாயிகளின் சிக்கல்கள் தீருமா? அவன் உயிர் பிழைத்திடுவானா? அவனது சீற்றம்தான் பல போராட்டங்களாக நாடு முழுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒருமுறைகூட அந்த விவசாயிகளின் குறைகளை நேரில் கேட்காத தலைமை அமைச்சர் தேர்தல் நேரத்தில் நான் விவசாயிகளின் தோழன் என கர்ஜிக்கத் தவறமாட்டார். பொறுத்திருங்கள், அக்கறை வார்த்தைகளையாவது கேட்போம் விரைவில்…

கட்டுரையாளர் குறிப்பு:

**R.ருக்மணி**, பொருளாதார ஆய்வாளர். MIDS நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமீப காலம் வரை உணவுப் பாதுகாப்புத் துறையின் இயக்குநராகப் பணிபுரிந்தவர். இத்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பல கட்டுரைகளையும் ஆய்வேடுகளையும் எழுதியுள்ளார்.

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

**நேற்றைய கட்டுரை:**[கால்நடைப் பொருளாதாரமும் வன்முறைகளும்!](https://minnambalam.com/k/2018/08/21/4)

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**

**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**

**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**

**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *