கறிவேப்பிலையின் மருத்துவக் குணங்கள்: ஹெல்த் ஹேமா

public

“ஏதாச்சும் வேலை ஆகணும்னா மட்டும்தான் வந்து பேசறாங்க, பழகுறாங்க ஹேமா… வெறுப்பா இருக்கு” என்று அலுத்துக்கொண்டாள் சினேகிதி ஒருத்தி. பலரும் இதுபோன்றதொரு சூழலைக்கடந்து கொண்டுதான் இருக்கிறோம். அதுபோன்ற நபர்களிடம் சற்று நாம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. இருப்பினும் நம்மால் பிறருக்கு ஆக வேண்டிய சில நல்ல காரியங்கள் இருப்பின் அதற்கு பிரதி உபகாரம் பார்க்காது செய்து விட வேண்டும். அதற்கான பாராட்டு நமக்குக் கிடைக்கவில்லை எனினும் நம்மால் அக்காரியம் சிறப்பாக நடைபெற்று பலர் பயன்பெற்றார்களே என்ற மனமகிழ்வோடு நகர்ந்துவிடலாம். கறிவேப்பிலையைப்போல் தூக்கி எறியத்தான் செய்யும் இந்த சமூகம். ஆம். வாருங்கள் அந்த கறிவேப்பிலையின் பயன்களைப்பற்றி சற்று பார்க்கலாம்.

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துகள் உள்ளன. இந்தச் சத்துகளால் கண்பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.

தலைமுடி வளரவும், கண்களுக்கு ஒளி தரவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரிதும் உதவுகின்றன.

தலைமுடி நல்ல கறுப்பு நிறமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தலைக்கு வைக்கும் எண்ணெயுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலை இலையை அரைத்து காயவைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாள்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும், முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுக்கும் தன்மை கொண்டது.

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே மூன்று மாதங்கள் சாப்பிட்டுவந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.

மலச்சிக்கலைத் தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்குச் சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

சாப்பிட்டவுடன் வீசி எறிகிறார்கள் என எந்த கறிவேப்பிலையும் கண் கலங்கியதில்லை. அது தன் சத்துகளைக் கொடுக்கும் சிறப்பான வேலைக்ச் செய்கிறது. மக்கள் அதை புரிந்து பயன்படுத்துவதில்தான் இருக்கிறது விஷயமே. ஆக, நம்மை புரிந்துகொண்டவர்கள் சூழ் உலகு அமைத்துக்கொள்வோம்.

[ஹெல்த் ஹேமா 01]( https://www.minnambalam.com/k/2017/10/01/1506796692)

[ஹெல்த் ஹேமா 02]( http://minnambalam.com/k/1506882613)

[ஹெல்த் ஹேமா 03](http://minnambalam.com/k/1506969017)

[ஹெல்த் ஹேமா 04](http://minnambalam.com/k/1507055404)

[ஹெல்த் ஹேமா 05](http://minnambalam.com/k/1507141814)

[ஹெல்த் ஹேமா 06](http://minnambalam.com/k/1507228218)

[ஹெல்த் ஹேமா 07](http://minnambalam.com/k/1507401004)

[ஹெல்த் ஹேமா 08](http://minnambalam.com/k/1507573803)

[ஹெல்த் ஹேமா 09](http://minnambalam.com/k/1507660229)

[ஹெல்த் ஹேமா 10](http://minnambalam.com/k/1507746617)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *