ஏ.சி.சண்முகத்துக்கு விஷால் நற்பணி இயக்கம் ஆதரவு!

public

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு அம்மாவட்ட விஷால் நற்பணி இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்களவை பொதுத் தேர்தல் சமயத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் நேற்று (ஜூலை 22) ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்த விஷால் நற்பணி இயக்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் தலைமையிலான நிர்வாகிகள், தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள கடிதத்தில், “நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர், சிறந்த பண்பாளர், சிறந்த நிர்வாகியுமான மரியாதைக்குரிய அண்ணன் ஏ.சி.சண்முகத்துக்கு எங்களுடைய விஷால் மன்றம் முழுமையாக ஆதரவளிக்கிறது. மேலும் அண்ணனின் வெற்றிக்காக வேலூர் தொகுதி முழுவதும் எங்கள் அமைப்பின் சார்பாகப் பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை ஏ.சி.சண்முகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் சங்கத் தேர்தலின்போது கடந்த ஜூன் 19ஆம் தேதி [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/06/19/82), “நடிகர் சங்கத் தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் எண்ணம். அதற்குக் காரணம் விஷாலின் திமுக ஆதரவு, அதிமுக எதிர்ப்பு நிலைப்பாடுதான் என்கிறார்கள் நடிகர் சங்க வட்டாரத்தில். அதிமுகவுக்கும் விஷாலுக்கும் பழைய பகை நிறைய இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் எச்சரிக்கையையும் மீறி விஷால் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் வேட்பு மனுவில் சில குளறுபடிகள் இருப்பதாக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குப் பின்னால் அதிமுக இருப்பதாக அப்போதே விஷால் புகார் கூறினார்.

அடுத்த பகை, அதிமுக சார்பில் நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு ட்விட் போட்டார் விஷால். அதில், ‘மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று அதிமுகவை பகிரங்கமாக தாக்கியிருந்தார். இதற்குப் பதிலடியாக, ‘ஏற்கனவே நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏழு கோடி ரூபாயை காணோமென்று கோடம்பாக்கமே உன்னைக் கொலைவெறியில் தேடுகிறபோது உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்று விஷாலைத் தாக்கியது நமது அம்மா. இப்படியாக விஷாலுக்கும் அதிமுகவுக்குமான முட்டல் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்று கூறியிருந்தோம்.

இந்த நிலையில் வேலூர் தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு விஷால் நற்பணி இயக்கத்தினர் ஆதரவளித்துள்ளது அவர் அதிமுக பக்கம் சாய்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ரஜினி மக்கள் மன்றத்தினரை ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாகப் பணியாற்ற உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது விஷால் இயக்கத்தினர் நேரிலேயே சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், நற்பணி இயக்கத்தினர் ஆதரவு கொடுத்தது விஷாலுக்குத் தெரிந்துதான் நடந்ததா என்ற கேள்வியும் மற்றொருபுறம் எழுந்துள்ளது.

**

மேலும் படிக்க

**

**[மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/22/61)**

**[ டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!](https://minnambalam.com/k/2019/07/22/78)**

**[தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/22/23)**

**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *