உத்தரகாண்ட் முதல்வர் யார்? : இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

public

உத்தரகாண்ட் முதல்வர் யார் என்று தேர்வு செய்ய இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. கோவா மாநில முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் மற்றும் மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் முதல்வரை இன்னும் பாஜக தேர்வு செய்யவில்லை. கடந்த 12-ம் தேதி கூடிய பா.ஜ.க ஆட்சிமன்றக் குழு கூட்டத்திலும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான முதலமைச்சர் யார் என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல்வர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி புதிய முதல்வரை கட்சித் தலைமை தேர்ந்தெடுக்கும். இன்று தேர்ந்தெடுக்கப்படும் புதிய முதல்வர் வரும் 18-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உபி முதல்வர் தேர்வு

உத்தர பிரதேச முதல்வரை தேர்வு செய்யும் பொருட்டு நாளை உபி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவுள்ளது. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 403 இடங்களில் பா.ஜனதா கட்சி 325 இடங்களை கைப்பற்றியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சர் தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூடி ஆலோசித்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் பதவிக்கு உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் யாரை முதல்வராக்குவது என பா.ஜ.க மேலிடம் இன்னும் முடிவு செய்யவில்லை. மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 14 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜ.க ஆட்சியமைப்பதால் முதல்வர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் யாருக்கேனும் கருத்து வேறுபாடு இருந்தால் அது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். இது நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதாலேயே முதல்வரைத் தேர்வு செய்வதில் அக்கட்சி கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உ.பி-யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நாளை (மார்ச் 18) கூடி தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் புபேந்திர யாதவ் இருவரும் தலைமை வகிக்கவுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *