^இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் 7

public

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மாடல் மொபைல்களை இந்தியாவில் தயாரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் *எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்துக்கு பிரத்யேகமாக அனுப்பிய மின்னஞ்சலில், “உள்ளூர் வாடிக்கையாளர்களுக்காகவும், இந்தியாவுக்கான எங்களது நீண்டகால அர்ப்பணிப்பை மேம்படுத்தவும் பெங்களூருவில் ஐபோன் 7 மொபைல்களை உற்பத்தி செய்வதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஒப்பந்த உற்பத்தியாளரான விஸ்ட்ரான் நிறுவனம் ஐபோன் எஸ்.இ, ஐபோன் 6எஸ் ஆகிய மாடல்களை பெங்களூருவுக்கு அருகாமையில் உள்ள ஆலையில் ஏற்கெனவே உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், மார்ச் மாத தொடக்கத்தின் முதல் இந்த ஆலையில் ஐபோன் 7 மாடல்களும் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையில் உற்பத்தியாகும் ஐபோன் 7 மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விற்பனையையும், சந்தைப்படுத்துதலையும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் ஐபோன் 7 மாடல்களின் விலை இந்தியாவில் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்குள் ஐபோன்களை இறக்குமதி செய்வதைக் காட்டிலும், இந்தியாவிலேயே ஐபோன்களை உற்பத்தி செய்வது செலவுகளைக் குறைக்க வழிவகை செய்கிறது. ஏனெனில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஊக்கப்படுத்துவதற்காக மொபைல் உற்பத்தியாளர்களுக்கு வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பை கைப்பற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *