[அனிதா வீட்டுக்குச் செல்லாதது ஏன்?

public

மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யாரும் செல்லாதது ஏன் என்று தினகரன் ஆதரவாளரும், அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளருமான புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்லில் நேற்று(செப்டம்பர் 03) நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் புகழேந்தி கலந்துகொண்டார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாணவி அனிதாவின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைத்திருக்கும். இதை அனிதாவின் குடும்பத்தினரே கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பாரதிய ஜனதாவிடம் மண்டியிட்டுத் தவம் கிடக்கிறது. அவர்கள் மத்திய அரசிடம் தங்களை அடகு வைத்துவிட்டனர். மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யாரும் செல்லாதது ஏன்? அங்கு சென்றால் மக்கள் விரட்டிவிடுவார்கள் என்ற பயமே காரணம்” என்று கூறினார்.

இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்று சொன்ன அவர், தமிழக மக்களை எடப்பாடி பழனிசாமி அரசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றார். “ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 12 பேருடன் சேர்ந்து செல்லும் பழனிச்சாமி அவரை முதல்வராக்கிய பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளருக்கு துரோகம் செய்துவருகிறார். குட்கா விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு நீதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தவர்கள் தற்போதுவரை நீதிபதியை நியமிக்கவில்லை. இவர்களிடமிருந்து கட்சியை மீட்டெடுக்கும் பொறுப்பு டி.டி.வி. தினகரனுக்கு மட்டுமே உள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது அவரது கற்பனை” என்று அவர் கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *