பள்ளிகளில் பயிலும் சிறார்களின் மன நலம் மற்றும் உணர்ச்சி நலம் ஆகியவற்றுக்கான ஆதரவுத் திட்டங்கள் தேவை என்பதை பள்ளிகள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ள அதேவேளையில், கூடுதல் பண்புகளுக்கான அடிப்படை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தான் இருக்கிறது. தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறார்களின் மன நல ஆரோக்கியத்தைப் பேணுவதிலும், ஸ்திரமான உணர்வுநிலைகள் மற்றும் பாடத்திட்டம் சார்ந்த சாதனைகளை எட்டுவதிலும் பள்ளிசார்ந்த செயல்பாடுகள் முக்கியப் பங்குவகிப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
குழந்தைகளில் பத்தில் ஒருவர் மருத்துவபூர்வமான மன நலப் பிரச்சினைகள் அல்லது நடத்தைக் கோளாறுகள் மற்றும் 14 வயதில் தொடங்கி, வாழ்வின் சரிபாதியைப் பாதிக்கும் மனநல நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதை தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, இந்த விஷயத்தில் பள்ளிசார்ந்த நடவடிக்கைகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த ஆய்வு கல்விக் கொள்கையிலிருந்து தொடங்குகிறது. கடந்த காலத்தில், கற்றலில் மட்டும் கவனம்செலுத்திய நிலையிலிருந்து நகர்ந்து விரிவான வகையில் பள்ளிசார்ந்த நடவடிக்கைகள்மீதும் கல்விக் கொள்கை கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. எனவே, இங்கிருந்து இந்த ஆராய்ச்சி தொடங்குகிறது.
இருந்தாலும், பள்ளிச் சிறார்களிடம் பள்ளிசார்ந்த செயல்பாடுகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நினைத்ததுபோல அத்தனை எளிதானதாக இல்லை.குழந்தைகளின் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பள்ளிசார்ந்த நிகழ்ச்சிகள், தனிப்பட்ட மாணவர் ஒவ்வொருவரின் இடையூறுகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கேற்ற செயல்பாடுகளை அமைப்பது – புரிதல் செயல்பாட்டுச் சிகிச்சை முதல் பாத்ஸ் திட்டம் எனப்படும் சிறார்களின் சமூக, உணர்வு கற்றலை மேம்படுத்தும் மாற்றுச் சிந்தனை செயல்திட்டங்கள் வரை – பள்ளிசார்ந்த மன நலம் திட்டங்கள்தாம்.
பல்வேறு ஆய்வுகளும் இத் திட்டத்தை முன்பே அமல்படுத்திய சில பள்ளிகளும் இச் செயல்பாடுகள் நல்ல பலனளிப்பதாகக் கூறியிருந்தபோதும் குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் பதற்றங்கள் காரணமாக இப் பள்ளிசார்ந்த செயல்பாடுகள் தோல்வியும் அடைந்துள்ளன.
இதேபோல, உயர்திறன்கொண்ட பாத்ஸ் திட்டம் அண்மையில், இரண்டு பள்ளிகளில் முயற்சிக்கப்பட்டதும் படுதோல்வியில் முடிந்தன. சமூக மற்றும் உணர்வுச் சகிப்புத்தன்மையை உருவாக்கவும், ஆக்ரோஷத்தைக் குறைக்கவும், நடத்தைக் கோளாறுகளை சரிசெய்யவும், அதேநேரத்தில் வகுப்பறைக் கற்றல் திறனை மேம்படுத்தவும் இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது அதிருப்திகரமாக முடிந்தன. ஒரு மாணவரின் நடத்தையை மேம்படுத்த முடியவில்லை. மற்றொருவர், மிகக் குழப்பமான முடிவுகளை அளித்தார். சிலநேரங்களில், பாத்ஸ் பள்ளியில் இருக்கும்போது நன்றாக இருக்கிறார்; வகுப்பறைக்குச் சென்றதும் பழையமாதிரி ஆகிறார்.
எனவே, இத்தகைய பயிற்சிகள் மட்டும் மாணவர்களுக்குப் போதுமானதல்ல என்பது தற்போதைய உதாரணங்கள்மூலம் தெரியவருகிறது. ஆனால், நமது குழந்தைகள் மன நல ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு என்ன செய்யவேண்டும்? ஒருங்கிணைந்த கற்றலும், அணுகுமுறையும்தான் இதற்கான பதிலை வழங்க இயலும்.
இத் திட்டங்களை முயற்சிப்பதில் பலவகையான அம்சங்கள் தொழிற்படுகின்றன. ஆனால், எந்தப் பொருத்தப்பாடுகளில் இவற்றை வழங்கினால் அதிக வெற்றி காணலாம் என்பது தெரியவேண்டியுள்ளது. இத் திட்டத்தைச் செயல்படுத்துவதிலேயே முக்கியப் பிரச்சினை இருப்பதுபோலத் தெரிகிறது. ஏராளமான பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட குழந்தைகள் மன நலம் மற்றும் நடத்தைக் குறைபாடுகள் அகற்றச் செயல்பாடுகள்கூட சில பள்ளிகளில் தோல்வியுறுகின்றன. கற்றலின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் தடைகளை எதிர்கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது.
தொடக்கப் பள்ளி குழந்தைகள் மன நலம் மற்றும் உணச்சி நலம் மேம்பாட்டுக்கான எமது சமீபத்திய அறிக்கை, பள்ளித் திட்டங்கள் சில நேரங்களில் திறனுடன் காணப்பட்டாலும், ஆராய்ச்சி முடிவுகளை சாதகமான முடிவுகளாக மாற்றுவதற்கான வலுவான பள்ளி அமைப்புகளும் அவசியம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தற்போது, இதற்கான ஏராளமான பயிற்சி மற்றும் சிகிச்சைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், எந்த ஒரு திட்டமும் நிஜ உலகில் முழு வெற்றியை அளிப்பதற்கானவை அல்ல. மாறாக, அத்திட்டங்களை பள்ளி அமைப்புகளுடன் ஒவ்வொரு தனி குழந்தைக்குமானதாக முழுமையாக ஒருங்கிணைக்கும்போதுதான் வெற்றி காணமுடியும்.
எளிமையாகக் கூறவேண்டுமானால், சிறார்களின் உணர்ச்சி நலம் என்பது பள்ளியின் அனைத்து அம்சங்களுடன் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்.இதைச் சொல்வது சுலபம்; காரியமாக்குவது மிகக் கடினம். தற்போது, தொடக்கப்பள்ளி பயிலும் சிறார்களின் உணர்ச்சி நலத்தை அதிகப்படுத்துவதில் நன்னடத்தை திட்டங்கள், பாடத் திட்டங்கள், ஆசிரியர்கள், வெளி வல்லுனர்கள் ஆகியோர், எந்த அளவுக்கு ஒருங்கிணைந்தால் சரி என்பதை பயிற்சியாளர்களுக்கும், கோட்பாட்டாளர்களுக்கும் கூறுவதற்காக நிரூபிக்கப்பட்ட உதாரணங்கள் எதுவும் இல்லை. தற்போதைவிட, விரிவான பள்ளிப் பார்வைகளுடன் தொடர்புடைய சிறார் நலன் முயற்சிகள் எதிர்காலத்தில் படைப்பாக்கமிக்க கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்மூலமே எதிர்காலத்தில் உருவாக்கப்படும்.சிறிய எண்ணிக்கையிலான பள்ளிகள் ஆய்வு நோக்கு முயற்சிகள் மேற்கொள்ள எமது அறிக்கை அழைப்புவிடுக்கிறது. வல்லுநர் ஆதரவு, தேசிய அளவிலான உதவி ஆகியவை அவசியம். இதன்மூலமே தொடக்கக் கல்வி முழுமையான ஒரு வரையறை உருவாக்கப்படும். அதன்பின்னரே, பள்ளிச் சிறார்களின் மன நலம் மேம்படுத்துவது குறித்த போதனைகளைத் தொடங்கமுடியும்.
கட்டுரையாளர்: லாரன் கார்ட்டர்-டேவியஸ்,
ஆராய்ச்சி அலுவலர், கார்டிஃப் பல்கலைக்கழகம், யு.கே.
https://theconversation.com/childrens-mental-health-needs-to-be-at-the-heart-of-school-policy-56091�,”