தமிழக அரசு 2006-ஆம் ஆண்டு கொண்டுவந்த கட்டாயத் தமிழ் கற்றல் சட்டப்படி, சிறுபான்மையினர் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழை முதல் பாடமாக கற்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் பாடங்களைப் படித்த மாணவர்கள் தங்களது மொழியிலேயே மொழிப் பாடத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களது கோரிக்கையை பள்ளிக்கல்வித் துறை நிராகரித்திருந்தது. இதையடுத்து சில மாணவர்களின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பிற மொழிகளில் மொழிப்பாடத் தேர்வெழுத ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாளே தேர்வுத்துறை இயக்குநரகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.�,
�தமிழில்தான் எழுதவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு
+1
+1
+1
+1
+1
+1
+1