�சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் மின் திட்டங்களும் பருவநிலை மாற்றத்தில் அதன் கடமையும்!

public

ஸ்ருதிசாகர் யமுனன்

பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் ஒவ்வொரு நாடும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்தச் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முடிவெடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்தியா இனி வரும் பத்தாண்டுகளில் தெளிவான கார்பன் உமிழ்வு இலக்குகளை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தி எதிர்வினை புரிந்தது. இந்தியாவும் மற்ற வளரும் நாடுகளும் பொருளாதார நலன்களைப் பெறும் உத்தியாக இந்தப் பருவநிலை ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி வருகின்றன என்று ட்ரம்ப் கூறினார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது இதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்.

ஆனால், இந்தியாவின் தீர்மானத்தின்படி அதன் செயல்பாடுகள் அமையவில்லை. இந்திய நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் மாசுபடுத்துவதற்கான தர நிர்ணயங்களை மீறுவதால், மத்திய அரசின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது என்று குமார் சம்பவ் ஸ்ரீவாத்சவாவின் அறிக்கையில் தெரியவந்தது. ஜனவரி முதல் தொடங்கப்பட்ட பதினாறு மின் உற்பத்தி நிலையங்களில் 2015 டிசம்பரில் மாசுபாடுகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள பாரிஸ் உடன்படிக்கையின் அம்சங்களைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டன. மேலும், தற்போது செயல்பட்டு வரும் 300 மின் உற்பத்தி நிலையங்கள் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீறுவதற்கு உதவி புரியும் வகையில் மத்திய மின்சார ஆணையம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சில மின் உற்பத்தி நிலையங்கள் சுகாதாரத்துக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமையும்.

புவி வெப்பமடைதலை மட்டுப்படுத்துவதற்கான பங்களிப்பு குறித்து தேசிய அளவிலான தீர்மானம் குறித்து 2015 அக்டோபரில் காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக் கழகத்திடம் உறுதி அளித்த தீர்மானத்தின்படி, இனி வரும் பத்தாண்டுக் காலங்களில், இந்தியாவில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள்தான் இந்திய மின் உற்பத்தி துறையில் ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்பட்டது. தவிர, இந்தியாவின் ஆற்றல் உற்பத்தியில் 60% க்கும் மேல் நிலக்கரி ஆலைகள் மூலமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடுமையான மாசுபாடு மற்றும் எரிசக்தித் திறன் தரநிலைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இந்த அனைத்து ஆலைகளிலும் மிக உயர் அளவிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தது.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து, வெளிவந்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட நிலவர அறிக்கையில் இந்திய அரசு தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தெரியவந்தது. உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக மின்சக்தி நிலையங்கள் செயல்திறனில் சமரசம் செய்துகொள்கின்றன என்பதும் தெரியவந்தது. இந்தியா, பருவநிலை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து ரூ. 56,700 கோடி நிதியையும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை நடைமுறைப்படுத்துவதற்காகத் திசைதிருப்பி விட்டுள்ளது என்பது இதைவிட மோசமான விஷயம்.

சுற்றுப்புற மாசுபாட்டை அதிகரிப்பதில் முக்கியக் காரணியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நிலக்கரி ஆலைகளின் மோசமான செயல்பாடுகளும் பருவநிலை மாற்ற விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடவைக்கின்றன. பொருளாதார நீதிக்கான தன் நிலைப்பாட்டை உலகம் மதித்து, கார்பன் உமிழ்வுகளை மட்டுப்படுத்தும் விஷயத்தில் சலுகைகள் வழங்க வேண்டும் என இந்தியா எதிர்ப்பார்த்தால், அது தன் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான தொழில்களில் உள்நாட்டுத் தரநிலைகளை எந்த சமசரமும் செய்துகொள்ளாமல் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால், பருவநிலை மாற்றங்களை எதிர்த்துப் போராடும் சுமையை வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு மாற்ற விழையும் ட்ரம்ப்பைப் போன்ற தலைவர்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது போலாகிவிடும்.

இந்தியா பருவநிலை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து ரூ. 56,700 கோடி நிதியையும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை நடைமுறைப்படுத்துவதற்காகத் திசை திருப்பி விட்டுள்ளது. மேலும், இந்தியாவின் புதிய ஆற்றல் கொள்கை 2040க்குள் நிலக்கரி எரிபொருள் திறன் திட்டங்கள் இரட்டிப்பாகும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரத்தில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி:[scroll.in](https://scroll.in/article/852709/the-daily-fix-polluting-coal-power-plants-undermine-indias-climate-change-mitigation-commitments)

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *