சந்திராயன் பத்தி பெருமையா பேசிகிட்டு இருந்தவர் ஒருத்தரை ரெண்டு நாளா ஆளைக் காணோம். இன்னைக்கு டீக்கடையில பார்த்து கூப்ட்டு விசாரிச்சேன். என்னன்னே பயங்கரமா அடிச்சுவிட்டீங்க இப்ப போகாம பின் வாங்கிருச்சேன்னு கேட்டேன். அதுக்கு அவர், “நம்மாளுங்க தொலை நோக்குப் பார்வையோட செயல்படுறவங்க. அன்னைக்கு மட்டும் சந்திராயனை அனுப்பி இருந்தோம்னா இன்னைக்கு கரெக்டா அங்க போயிருக்கும். இப்ப சந்திரகிரகணம் நடந்துகிட்டு இருக்கும் போது சந்திரனை காணோம்னு தேடிக்கிட்டு இருக்குமேங்குறதுக்காகதான் நிப்பாட்டி வச்சிருக்கோம்”னு சொல்றாரு. அதுசரி ரேடார்ல தெரியக்கூடாதுங்குறதுக்காக மேகமூட்டம் இருக்குறப்ப தாக்குனோம்னு சொன்ன குரூப் தானே இவங்க. ஆனா ஒண்ணு சந்திராயன் போகாதததுக்கு இதுதான் காரணம்னு நம்ம விஞ்ஞானிகளுக்கு தெரியாம பாத்துக்கனும். இல்லைன்னா அவங்க வாழ்க்கையை வெறுத்து ராஜினாமா பண்ணுனாலும் பண்ணிடுவாங்க. அப்டேட்டை பாருங்க.
**முகிலன்**
பல்லி விழும் பலன்களில் குழம்பில் விழுந்தால் என்ன பலன்னு ஏன் போடாம விட்டாங்க.,
**ஏழைகளின் நயன்தாரா**
சொல்லாம கொள்ளாம எங்கேயாச்சும் போயிடனும்…அப்புறம் யாரெல்லாம் தேடலன்னு ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிட்டு ..திரும்பி வந்து அவங்கள பாடாப்படுத்தனும்
**ஜோக்கர்… **
அத்தனை விதமான ஆசனங்களும் கைவந்த கலையாகி விடுகிறது,
“அன்ரிசர்வேஷனில்” பயணிக்கும் போது..!!!
**சக்திமான் **
“பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளது!” – அன்புமணி ராமதாஸ் #
இந்தியாவ கலாய்ச்சுட்டாராமா
**சரவணன் Ucfc**
ராஜராஜ சோழன் ஆட்சியை ரஜினி வழங்குவாராம், காமராஜர் ஆட்சியை எடப்பாடி வழங்குறாராம்.. பசிச்சா எப்படி கேட்டு வாங்கி சாப்பிடுறாங்க..
**ஜோக்கர்… **
2021 தேர்தலில் இந்து மக்கள் கட்சி நிபந்தனையின்றி ரஜினிகாந்திற்கு ஆதரவு ~ அர்ஜூன் சம்பத்
“பிறக்காத பிள்ளைக்கு பேரு வச்சு, பேறுகாலம் பார்த்தானாம்” வேலையில்லாத வேலப்பன்.
**மித்ரன் **
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்! – பிரேமலதா #
அடமானத்துல இருக்குற வீட்டை மீட்க எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..?!
**கோழியின் கிறுக்கல்!!**
ரோஸ் கலருக்கும், பிங்க் கலருக்கும் என்ன சார் வித்தியாசம்!?
சொல்றவங்க வயசு மட்டும் தான் சார்!!!
**SHIVA SWAMY.P**
லண்டனில் மழை வந்தால் கொஞ்ச நேரத்துல மழைநீர் காணமல் போய்விடுகிறது,
சென்னையில மழை வந்தால்,
கொஞ்ச நாளைக்கு சென்னையே காணாமல் போய்விடுகிறது…
**பர்வீன் யூனுஸ்**
திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது-தமிழிசை #
நோட்டா இருக்கும் வரை பாஜக வளர்ச்சி அடையாத மாதிரியா..?
**mohanram.ko**
கூப்பிட்டு பேசுவது, உட்கார இடம் கொடுப்பது, அட்ஜஸ்ட் செய்ய சொல்லி கொடுப்பது, இப்படி ‘அடிக்கிக்கிட்டே போகலாம்’
ஒரு ஷேர் ஆட்டோவில்
**பழைய சோறு **
ஒரு மீனின் வாழ்கை என்பது குளத்தில் ஆரம்பித்து குழம்பில் முடிகிறது..!
**மித்ரன் **
காமராஜர் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது! – சரத்குமார் #
இதை எடப்பாடி கேட்டா அவரே ரூம் போட்டு சிரிப்பாரு..?
**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**
சாகற நாள் எப்போனு தெரிஞ்சா, வாழற நாட்கள்ல நிம்மதி பறிபோயிரும்.
மதிய சாப்பாட்டுக்கு லஞ்ச் பாக்ஸ்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சா, காலையில ஆபிஸ்ல வேலை செய்யற ஆர்வம் பறிபோயிரும்.
**ரஹீம் கஸ்ஸாலி**
தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணத்தை செலுத்தி தான் ஆக வேண்டும்: நிதின் கட்கரி #
ஏங்க அமைச்சரே.. மக்களுக்கு தரமான சாலை வசதி செய்து கொடுப்பதெல்லாம் ஒரு அரசாங்கத்தின் கடமையில் வரதா? காசு வாங்கிட்டுத்தான் எல்லாத்தையும் செய்யணுமா?
சரி..மக்கள் கட்டற ரோட் டேக்ஸ் என்னத்துக்கு?
**எனக்கொரு டவுட்டு **
இங்க எல்லாரும் சௌக்யம் அங்க எல்லாரும் சௌக்யமா என்பது போய் இங்க நல்லா மழை அங்க மழையா என நலம் விசாரிப்புகள் ஆரம்பமாகிறது..!!
**கோழியின் கிறுக்கல்!!**
உங்களின் கையாலாகா தனத்தை அப்பட்டமாய் உணர வேண்டுமெனில், குழந்தைகளின் சண்டைக்கு பஞ்சாயத்து செய்து வைத்தல் போதுமானது!!
**தமிழன்டா**
சந்திராயன் 2 கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
ரேடார் ஸ்பெஷலிஸ்ட் மேக விஞ்ஞானிய கூப்பிட்டு யோசனை கேட்ருக்கலாம்,
ஐடியா இல்லாத பசங்கடா
-லாக் ஆஃப்
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”