திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி, கோம்பை ஆகிய கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கன்னிவாடி வனச்சரக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வனச்சரகர் சக்திவேல் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காட்டு யானைகளை மேல்மலைக்கு விரட்டிவிடுவதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
**-ராஜ்**
.