�உங்களின் பேரனாக வந்திருக்கிறேன்! பாட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

public

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

மக்களைத் தேடி என்ற அடிப்படையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் சோமலாபுரம் பகுதியில் இன்று (ஆகஸ்டு 2) காலை மக்களை சந்தித்தார் ஸ்டாலின். அவரோடு வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார், குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

”இந்த ஏரியாவுக்கெல்லாம் உங்களை மாதிரி தலைவருங்க யாரும் வந்ததே இல்லை. ஆனா எங்களைத் தேடி நீங்க வந்திருக்கீங்க’ என்று கூறி ஸ்டாலினை வரவேற்றனர் மக்கள். அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து மக்களையும் அமரவைத்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டார் ஸ்டாலின்.

“என் கணவர் இறந்துட்டாருங்க. ஆனா இன்னும் எனக்கு ஓஏபி வரலை. ஓ.ஏ.பி. வாங்கிக் கொடுக்கணும்னா அஞ்சாயிரம் ரூபாய் கேக்குறாங்க” என்று ஒரு பெண்மணி ஸ்டாலினிடம் முறையிட்டார் சோமலாபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

சின்னபொன்னையா புரத்தைச் சேர்ந்த இன்னொரு பெண், ‘எங்க ஊர்ல டிச்சி கால்வாய் கட்டினாங்க. ஆனா அதை சரியா கட்டாததால ஒரே கொசுத்தொல்லை தாங்க முடியல. மகளிர் சுய உதவிக் குழுவெல்லாம் இப்ப யாரும் கண்டுக்கறதே இல்லங்க” என்றார்.

இதுபோல் மக்கள் பலர் புகார்களை ஸ்டாலினிடம் அடுக்கினர்.

இதற்குப் பின் அவர்களிடையே பேசிய மு.க.ஸ்டாலின், “இங்க நீங்க என்கிட்ட உங்க குறைகளை சொன்னீங்க. இதையெல்லா தீர்த்து வைக்க எம்.பி, எம்.எல்.ஏ.வரணும்னு கூட அவசியம் கிடையாது. உள்ளாட்சி அமைப்புகளோட கவுன்சிலர், தலைவரே இதையெல்லாம் தீர்த்து வைக்க முடியும். ஆனா இந்த ஏடிஎம்கே அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே இல்லை. கலைஞர் முதலமைச்சரா இருந்தப்ப உள்ளாட்சித் தேர்தலை முறையா நடத்தினோம். நானே உள்ளாட்சித் துறை அமைச்சரா இருந்தவன் தான். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் என நிறைய திட்டங்களை நிறைவேத்தினோம்.

குடிதண்ணீர் பிரச்சினைய பத்தி சொன்னீங்க. திமுக ஆட்சி காலத்துல இப்ப நமது வேட்பாளரா இருக்காரே கதிர் ஆனந்தின் அப்பா துரைமுருகன் வந்து கலைஞர்கிட்ட சொன்னாரு. அதன்படியேதான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவந்தோம். அதன் மூலமா வேலூர் மாவட்டத்தோட கிராமம் வரைக்கும் தண்ணீர் கிடைக்குற மாதிரி கொண்டுவந்தோம். ஆனா 2016ல ஒரே ஒரு சதவிதத்துல நாம ஆட்சி அமைக்க முடியாமப் போச்சு. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில நாம கொண்டு வந்த திட்டத்தை நிறைவேத்திட்டா கலைஞருக்கும், துரைமுருகனுக்கும், எனக்கும் நல்ல பேரு கிடைச்சுடும்னு அந்த திட்டத்தை சரியா நிறைவேத்தலை. அதனாலதான் இன்னும் பல பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை இருக்கு. நீங்க திமுகவுக்குதான் ஓட்டுப் போடப் போறீங்க. கதிர் ஆனந்த் எம்.பி. ஆனவுடனே முதல் வேலையே இந்த குடிதண்ணீர் திட்டத்தை எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவர்றதுதான்.

ஏற்கனவே குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி தேர்தல்ல திமுக வேட்பாளர் காத்தவராயனுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க. அதுக்காக உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். மறுபடியும் கதிர் ஆனந்தை எம்.பி. ஆக்கினதுக்காக நன்றி சொல்ல வருவேன். நன்றி சொல்ல மட்டுமில்ல, உங்களோட எல்லா பிரச்சினைகளையும் தீர்க்குறதுக்கு நாங்க எல்லாருமே எப்போதுமே இங்க வருவோம். என்னை விட மூத்தவங்களா இருந்தா உங்க தம்பியா வந்திருக்கேன். என்னை விட சின்னவங்களா இருந்தா உங்க அண்ணனா வந்திருக்கேன். வயசான தாய்மார்களோட பேரனா நின்னு கேக்குறேன்” என்று சென்டிமென்ட்டாக பேசினார் ஸ்டாலின்.

உங்க பேரனாக வந்திருக்கிறேன் என்று ஸ்டாலின் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த பல மூதாட்டிகள் இன்ப அதிர்ச்சியாகி சிரித்துவிட்டனர். இதைப் பார்த்த திமுக லோக்கல் புள்ளிகள், ‘தலைவர் எப்பவும் இளமையாதாம்மா இருப்பாரு. எப்பவும் உங்களுக்கு பேரன் தான்” என்று அவர்களை மேலும் உற்சாகமடைய வைத்தனர்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக இல்லாமல் 100 எம்.எல்.ஏ.க்கள் – அழகிரி பேச்சு!](https://minnambalam.com/k/2019/08/01/71)**

**[பிக் பாஸ்: சாக்ஷி கோர்ட்டில் கவின் மட்டுமா அக்யுஸ்டு?](https://minnambalam.com/k/2019/08/02/27)**

**[சொமட்டோ: அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/02/24)**

**[தற்கொலைக் கடிதமும் வருமான வரித் துறை விளக்கமும்!](https://minnambalam.com/k/2019/07/31/57)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *