அத்திவரதரை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விவிஐபி வரிசையில் வழிபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் மீது மதுரை, சென்னை உள்பட பல நகரங்களிலுள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (ஜூலை 16) அத்திவரதரை மிக மிக முக்கிய பிரமுகர்கள் மட்டுமே தரிசிக்கும் விவிஐபிக்கள் வரிசையில் வரிச்சியூர் செல்வம் தரிசித்துள்ளார்.
உடல் முழுவதும் நகைகளுடன் காரிலிருந்து இறங்கிய வரிச்சியூர் செல்வம், அங்கிருந்து விவிஐபி வரிசையில் சென்று அத்திவரதர் சன்னதியின் அருகே அமர்ந்து தரிசித்தார். அதாவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசித்த அதே இடத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து அத்திவரதரை தரிசித்தார். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அத்திவரதர் தரிசன முறையை பொறுத்தவரை பொது தரிசனம், விஐபி தரிசனம் (டோனர்பாஸ்) மற்றும் ஆன்லைனில் ரூ.500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து சகஸ்ர நாம தரிசனம் செய்வது போன்றவை உள்ளன. கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி. தரிசனமும் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் போலி பாஸ் பயன்படுத்தி அத்திவரதரை தரிசிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் நின்று கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசிக்கும் நிலையில், குற்றவாளியான வரிச்சியூர் செல்வம் மிக முக்கிய பிரமுகர்கள் மட்டுமே தரிசிக்கும் பகுதியில் சென்று அத்திவரதரை தரிசித்தது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது. செல்வத்திற்கு விஐபி பாஸ் வழங்கியது யார் என்பது தொடர்பாகவும், விஐபி பாஸ் உண்மையானதுதானா என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். அவர் தரிசனம் செய்த போது பணியில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”