�அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!

public

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய வீடியோ பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு இந்த விவகாரத்தில் ஓர் அறிக்கையை நேற்று ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே காவல் துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அல்லாத காவலர்களின் பிரச்சினைகளை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டுகொள்வதில்லை என்பது காவலர்களின் பெரும் மனக்குறையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பந்தப்பட்ட சர்ச்சை சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய காஞ்சிபுரம் கலெக்டர் பற்றி எதுவும் குறிப்பிடாமல் போலீசாரின் பின்னால் தாங்கள் நிற்போம் என்று தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் டாக்டர் பிரதீப் பிலிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்துக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ள தமிழக காவல் துறை அமைதியாகவும் சுமுகமாகவும் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்வதை உறுதிப்படுத்தி வருகிறது. காஞ்சிபுரத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு காவல் துறை ஊழியரையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

அதேநேரம் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் காவல் துறையினருக்கு மதிப்பு மரியாதையையும், அவர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தமிழக காவல் துறை கீழ் பணியாற்றும் ஒவ்வொரு காவலரின் பின்னால் உறுதியாக நிற்கும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவு தரப்பினரும் காவல் துறையை மதிக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவர் குறிப்பிட்டிருப்பது காஞ்சி கலெக்டர் பொன்னையாவைத்தான் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

“மனித உரிமை ஆணையமே தலையிட்டும்கூட நேரடியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தால் இயலவில்லை என்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது. என்ன செய்வது?” என்று மனம் புழுங்குகிறார்கள் நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த், அத்திவரதர் தரிசனத்தின்போது பாதுகாப்புப் பணிக்காக பெரும்பாடுபட்ட காவலர்கள்.

**

மேலும் படிக்க

**

**[டிவி கொடுக்கும் ஜியோ!](https://minnambalam.com/k/2019/08/13/18)**

**[கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?](https://minnambalam.com/k/2019/08/13/22)**

**[கணக்கு கேட்கும் சங்கீதா… கடுப்பில் வேலூர் திமுகவினர்!](https://minnambalam.com/k/2019/08/13/70)**

**[இரட்டைக் குழல் துப்பாக்கி!](https://minnambalam.com/k/2019/08/13/19)**

**[டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?](https://minnambalam.com/k/2019/08/13/73)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *