சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கருதப்படும் ஈஸ்டர் தினம் இன்று நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளி தினம் இயேசு கிறிஸ்து மரிக்கும் நாளாகவும், ஈஸ்டர் தினம் அவர் உயிர்த்தெழும் நாளாகவும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. நாடு முழுக்க உள்ள தேவாலயங்களில் இரவு நேர வழிபாடு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் பல்வேறு தேவாலயங்கள் உள்ளன. பெசண்ட் நகர், சின்னமலை, சாந்தோம், தி நகர் ஆகிய பகுதிகளில் இருக்கும் தேவாலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இங்கு பலர் வந்து நேற்று இரவும், இன்று அதிகாலையும் வழிபாடு நடத்தினர். பொதுவாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் தினத்தின் போது பலர் வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதேபோல் நள்ளிரவிலும், அதிகாலையிலும் பலர் இங்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பொதுவாக இந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். முக்கியமாக கேரளாவில் இருந்து பலர் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
அதேபோல் நேற்றும், இன்று அதிகாலையும் பலர் இங்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இங்கு ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. மக்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்திய படி வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு தேவாலயத்தில் பேராலய அதிபர் மூலம் திருப்பலி நடத்தப்பட்டது. மக்கள் பலர் தேவாலயங்களில் கூடியதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் நாளின் போது இலங்கையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முக்கியமாக தேவாலயங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. இதில் 560 பேர் வரை பலியானார்கள். இந்த நிலையில் இன்று ஈஸ்டர் முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
.