�
நடிகர் விஷால் – அனிஷா அல்லா திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று (மார்ச் 16) நடைபெற்றுள்ளது.
திரையுலகில் பெரும்பாலும் நடிகைகளிடம் கேட்கப்படும் கேள்வி ‘உங்களுக்கு திருமணம் எப்போது’ என்பது தான். ஆனால் நடிகர் விஷாலிடமும் இந்த கேள்வி அதிக முறை கேட்கப்பட்டது. விஷால் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்தி பரவ அதை இருவரும் மறுத்தனர். திருமணம் தொடர்பான கேள்விகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விதமாக ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்ட பின் அங்கு தான் எனது திருமணம் நடைபெறும்’என்று அறிவித்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. அதையும் விஷால் மறுத்தார். அதன்பின் அனிஷாவே நானும் விஷாலும் காதலிக்கிறோம் என்றும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன் பின் விஷால் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அனிஷாவுக்கும் தமக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என விஷால் ஜனவரி மாதம் கூறினார்.
இன்று இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டபட்ட பின் திருமணம் நடைபெறுமா அல்லது அதற்கு முன்னர் வேறு இடத்தில் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
�,”