ஹெல்த் ஹேமா

public

நம் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் சரிசெய்ய நாம் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றினாலே எந்த வியாதிகளும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

1. இனிப்பை முதலில் உட்கொள்ள வேண்டும் (செரிமான சுரப்பிகள் இயங்க தொடங்கும்).

2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்து உட்கொள்ள வேண்டும்.

3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் ஆறு சுவைகளையும் உட்கொள்வது மிகவும் சிறந்தது – முழு நெல்லிக்காய் மிக சிறந்த அறுசுவை கனி.

4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து உதட்டை மூடி உட்கொள்ள வேண்டும். நொறுங்கத் தின்றால் 120 வயது வரை வாழலாம். வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக்கூடியது உமிழ்நீர் கலந்த உணவு. உமிழ்நீர் கலந்த உணவை மட்டும்தான் நமது உடல் மருந்தாக மாற்றும்.

5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று உண்ண வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தைப் பாதிக்கும்.

6. உணவு உட்கொள்ளும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். உணவுகேற்ற உமிழ்நீர் சுரக்க இது உதவும்.

7. உணவை கையால் எடுத்து உட்கொள்வது சிறந்தது. நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது. விரலில் ஜீரண சுரப்பிகளைத் தூண்டும் திறன் உள்ளது.

8. சாப்பிடும் முன் 30 நிமிடமும் சாப்பிடும்போதும், சாப்பிட்ட பின்பும் 30 நிமிடமும் தண்ணீர் அருந்தக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்காக உற்பத்தியாகும் 500 வகை அமிலத்தை நீர்தது போக செய்து செரிமானத்தை தாமதப்படுத்தும்). உமிழ்நீர் உணவில் கலந்திருந்தால் கண்டிப்பாக விக்கல் வராது.

9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, மொபைல்போன் பார்த்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே உணவு உட்கொள்ள கூடாது. கவனம் உணவில் மட்டுமே இருக்க வேண்டும் (கவனம் உணவில் இருந்தால்தான் உமிழ்நீர் சரியாகச் சுரக்கும்)

10. சம்மணமிட்டு உணவு உட்கொள்ள வேண்டும். இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்துக்கு உதவும். காலைத் தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது சரியான முறை அல்ல.

11. பழங்களை ஜூஸாகச் சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

13. உணவு உட்கொள்ளும் முன் கைகால் முகம் கழுவி் முக்கியமாக உள்ளங்கால் நனைத்து இருத்தல் நலம்.

14. குளித்தபின் 45 நிமிடங்கள் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.30 மணி நேரம் குளிக்கக் கூடாது இதுசெரிமானத்தை பாதிக்கும்.

15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.

235/- ரூபாய் மதிப்புள்ள ஆம்னி பஸ் கட்டணம் தற்போது 1500/- ரூபாயைத் தாண்டி விற்றுக்கொண்டிருப்பதை போல, எளிமையான இந்த குறிப்புகளின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஆக, இன்று அளவான ஆரோக்கியமாக இவ்வளவு போதும். மற்றவற்றை நாளை பார்க்கலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *