தேவையான பொருள்கள்:
சுக்கு – சிறிதளவு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
வேப்பம்பூ – சிறிதளவு
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு.
மேலே கூறிய பொருள்களைத் தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து சலித்துக்கொள்ளவும். இவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வரவேண்டும்.
குழந்தை பிறந்த பெண்கள் இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் சுடுசாதத்தில் போட்டு நெய் விட்டு, பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் வாயு அண்டாது, பால் குடிக்கும் குழந்தையும் கக்காது.
பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடு செய்ய வேண்டும். அதற்குக் கீரைகள், பேரிச்சை, கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.
குழந்தைகள் ஒட்டுண்ணிகள். எனவே தாய்மார்களின் சரியாக சாப்பிட்டால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதற்காக கண்ணில் தென்படுவதை எல்லாம் சாப்பிடக்கூடாது. கொழுப்புசத்துள்ள உணவுகளை தவிர்த்து புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.�,