ஹெலிகாப்டர் வாடகைக்கு கிடைக்குமா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

கஜா புயல்ன்னு பேர் வச்சத்துல இருந்து இப்ப வரைக்கும் ஓவர் டைம் போட்டு கலாய்ச்சுகிட்டு இருக்காங்க. பேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் இவங்க அடிக்குற கூத்துக்கு கரையை கடக்கும் போது ஒரு காட்டு காட்டிவிட்டுட்டு போகப்போகுது. புயல் வர்ற வேகத்தை விட இந்த பிரேக்கிங் நியூஸ் தான் அசுர வேகத்துல வந்துகிட்டு இருக்கு. இதுலாம் பாதுகாப்பு விழிப்புணர்வுல வருதா, இல்லை பீதியை கிளப்புறதுல வருதான்னு தெரியலை. எந்த லிஸ்ட்ல வந்தாலும் லேசா நெஞ்சு வலிக்க ஆரம்பிக்குது.. முடியலை.. எக்ஸ்க்லுஸிவ்ன்னு போட்டு கடலுக்கு பக்கத்துல போய் நின்னு லைவ்ல வர்ற ரிப்போர்ட்டர்ஸுக்கும் கொஞ்சம் விழிப்புணர்வு கொடுத்தா நல்லா இருக்கும். அப்டேட்டை பாருங்க, புயல் கரையை நெருங்கிருச்சாம் ஹெலிகாப்டர் வாடைகைக்கு எடுத்துட்டு வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்.

**@Kozhiyaar**

நமக்கு பிடித்ததை செய்வதிலிருந்து நம்மால் முடிந்ததை செய்தால் போதும் என்ற நிலைக்கு மாறி விடுகிறது வாழ்க்கை!!

**@amuduarattai**

விளையாட்டை மையப்படுத்தி ‘தளபதி 63’: அட்லீ திட்டம் .

கில்லி படத்தையே சுட்டு இருப்பாரோ.!?

**@Annaiinpillai**

சிங்கத்தை விட ஆட்டு மந்தைகள் பலமானதா-

தமிழிசை ஆவேசம்# யக்கா முதல்ல நீங்க போடுர கூட்டத்துக்கு ஆள் தேத்துங்க, சிங்கம் ஆடு எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்!

**@Thaadikkaran**

போதும் என்று நினைத்திருக்கையில், சொல்லாத தோசையை நம் அருகில் வந்து,தோசை உங்களுக்கான்னு கேட்டு நம்மை சாப்பிட வைத்து விடுகிறார் சர்வர்..!

**@parveenyunus**

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தருவோம் -ஜெயக்குமார் #

என்ன இவரு..தானா வந்து வேன்ல ஏறுறாரு..?

**@yugarajesh2**

EPSம், OPSம் அதிமுகவை தினகரனிடம் இருந்து காப்பாற்றி விட்டனர்-துரைக்கண்ணு# ஆனால்? மோடிக்கிட்ட மாட்டிகிட்டாங்களே..!!

**@HAJAMYDEENNKS**

புயலை விட இவங்க தரும் பேட்டிகள்தான் பயம் தருது…!

**@gips_twitz**

ரபேல் ஒப்பந்ததாரரை தெரியாது என்று எப்படி சொல்கிறீர்கள்.. இதுதான் நாட்டு பாதுகாப்பின் மீதான அக்கறையா? – மோடியை விளாசிய நீதிபதி கே.எம். ஜோசப்

இப்ப எச்.ராஜா வந்து நீதிபதி ஜோசப்க்கு அமெரிக்க தீவிரவாதிகளோட தொடர்பிருக்குனு சொல்லுவாரு பாருங்க

**@ajmalnks**

கஜா புயலால் கடற்கரையில் நின்று செல்ஃபி எடுக்க தடை-செய்தி

போகும்போது ஒரு செல்ஃபியை அப்லோடு பண்ணிட்டு லைக் அள்ளிட்டு போயிடுறேனே-பேஸ்புக் போராளிகள்.

**@MJ_twets**

மனுஷன் காலையில் இருந்து சாய்ங்காலம் வரை மானேஜர்ட்ட திட்டு வாங்குறான், மாலையில இருந்து காலை வரை மனைவி கிட்ட திட்டு வாங்குறான், வாழ்க்கை ஒரு வட்டம் தான் போல.!

**@Annaiinpillai**

கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது – பொன்னார் # எப்படி ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுவீங்களா சாரே!

**@mufthimohamed1**

கஜா புயல்னு பேர் வச்சதுக்கு பதிலா காலா புயல்னு வச்சுருக்கலாம், வர்றதும் தெரியல,போறதும் தெரியல.

**@ajmalnks**

புயல் வீசும் மாவட்டங்களில் நெல் மரங்கள் சாயவும், பாதிப்படையவும் வாய்ப்புள்ளது – அமைச்சர் ஆர்பி உதயகுமார்

மனுசன் செல்லூருக்கே டஃப் கொடுப்பாரு போலவே…

**@HAJAMYDEENNKS**

மதுரையை எல்லாம் செல்லூர் ராஜூ என்ற நகைச்சுவை புயலை தவிர வேற எந்த புயலும் தாக்கியது இல்லை !

**@Kannan_Twitz**

என்னங்கடே ஏதோ கஜா புயல்னீங்க சித்திரை மாசம் கூட இப்படி வெயில் அடிக்கல ஆனா இன்னைக்கு அப்படி ஒரு வெயில் அடிக்குது… எதிர்பார்த்ததுதான்!

**@amuduarattai**

செய்தி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி.

பஞ்ச்: உங்க பேச்சு எந்த அளவுக்கு, அவங்களை உணர்ச்சி வசப்பட வச்சு இருக்கு பாருங்க தலைவரே.!

**@Akku_Twitz**

மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பார்த்து பாஜக அரசுக்கு மீண்டும் வாக்களிப்பார்கள் – பிரதமர் மோடி #

பாஜக ஆட்சில பட்டேலுக்கும் பெட்ரோலுக்கும் மட்டுமே வளர்ச்சி

**@sultan_Twitz**

திருமணமான பெண்களில் 3ல் ஒருவர் கணவனிடம் அடி வாங்குகிறார் ஆய்வில் அதிர்ச்சி தகவல் – செய்தி #

மீதி ரெண்டு பேரு பொண்டாட்டி கையால அடிவாங்குறாங்க போவியா..?!

**@rahimgazali**

காலையிலேயே சுள்ளுன்னு அடிக்கற வெயிலை பார்த்தால், கஜா புயலா? கஜா வெயிலான்னு ஒரே குழப்பமா இருக்கு.

**@Kozhiyaar**

முன்னெல்லாம் துணி கிழிஞ்சு இருந்தா வேறு புதுசா வாங்குவோம்!!

இப்பெல்லாம் துணி கிழிஞ்சு இருந்தா தான் புதுசே வாங்குறோம்!!!

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share