]ஹீரோவின் பயணத்தை தொடங்கிய மாளவிகா

Published On:

| By Balaji

விஜய தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (மே 19) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மாளவிகா மோகனன்.

மலையாளத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய மாளவிகா மலையாளப் படங்களிலேயே கவனம் செலுத்திவந்தார். ஒரு கன்னடப் படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் மாளவிகா இந்தியத் திரையுலகம் முழுவதும் கவனிக்கப்பட்டார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த அந்தப் படம் மாளவிகாவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் அரவிந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் சமீபத்தில் இணைந்தார். மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்திற்கு அரவிந்த் அண்ணாமலை வசனம் எழுதியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் மூலம் தெலுங்கு திரையுலகில் விஜய தேவரகொண்டாவுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவாகியுள்ள நிலையில் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share