சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 13) பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படம், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இரும்புத்திரை படத்துக்கு முன்பாகவே சிவகார்த்திகேயனுடன் மித்ரன் பேச்சுவார்த்தையில் இருந்துள்ளார்.
தற்போது இருவரும் இணைந்து உருவாக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘ஹீரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி இதன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த இவானா மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார்.
ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அந்தோணி ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தவிர பாண்டிராஜ் இயக்கத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
�,”