கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடைபெற்ற உலகப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு எதிரான மாநாட்டில் ஏராளமானப் பெண்களும், பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டனர். அதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகை ஆஷ்லி ஜூட் கலந்துகொண்டார். இவர் உலகளவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் ஆளானப் பெண்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் உலகப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்ட அவர், உலகளவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகளை பற்றியும் தன் வாழ்க்கையில் நடந்த பாலியல் தொல்லை குறித்தும் வெளிப்படையாகப் பேசினார்.
அவர் பேசியதாவது, **பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகத் தான் நான் கருதுகிறேன். நான் 8 வயதிலே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன். மேலும் 14 வயதில் கற்பழிக்கப்பட்டேன். அதன்பின் 1998ஆம் ஆண்டிலும் கற்பழிக்கப்பட்டேன். என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் உலகில் ஏராளம். அவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்** என நிகழ்ச்சியின் போது கூறினார்.�,