`ஹாலிவுட் கலைஞர்களை இயக்கும் மாதவன்

public

மாதவன் நடித்து இயக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ தயாராகிவருகிறது. இவர் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராகச் செயல்பட்டவர். 1994ஆம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக மத்திய புலனாய்வுத் துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. அண்மையில் இவருக்கு இழப்பீடும் கிடைத்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களை, பாதிப்புகளை ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவு செய்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை தழுவி இந்தப் படம் உருவாகிறது. வரலாற்றுக் கூறுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராவதால் அதற்கேற்றார் போல் மாதவனும் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

நடிப்பில் கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ், இந்தி திரையுலகில் பல்வேறு உச்சங்களை எட்டிய மாதவன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 17 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் மூலம் சிம்ரனுடன் இணைந்து மாதவன் நடிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் இருவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன், “ரான் டொனச்சியுடனும் பிள்ளிஸ் லோகனுடனும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாகவும் கௌரவமாகவும் உள்ளது. மனதின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் தற்போது படக்குழு செர்பியாவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளது.

ட்ரை கலர் பிலிம்ஸ், விஜய் மூலன் டாக்கீஸ், சஃப்ரான் கணேஷா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படம் உருவாகிவருகிறது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/19/82)**

**[எடப்பாடி – வேலுமணி இடையே விழுந்த விரிசல்!](https://minnambalam.com/k/2019/06/19/32)**

**[ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!](https://minnambalam.com/k/2019/06/18/51)**

**[தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?](https://minnambalam.com/k/2019/06/19/31)**

**[பிரேமலதா சமரசம் தோல்வி!](https://minnambalam.com/k/2019/06/19/19)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *