இயக்குநரும், நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவோம் சந்திப்போம், பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லஷ்மி ராமகிருஷ்ணன். சொல்வதெல்லாம் உண்மை என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் ராமகிருஷ்ணன். நடிப்பு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆரோகனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகியவை இவர் இயக்கிய திரைப்படங்களாகும். இவற்றைத் தொடர்ந்து லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர்.
இப்படம் சென்னை வெள்ளத்தின் போது இரு நபர்களுக்கிடையே மலரும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பசங்க படத்தில் நடித்த நடிகர் கிஷோர் கதாநாயகனாகவும், லவ்லின் சந்திரசேகரும் நடித்துள்ளனர். நடிகை விஜி சந்திரசேகரின் மகள்தான் லவ்லின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘ஆடுகளம்’ கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவுப் பணிகளையும், பிரேம் படத்தொகுப்புப் பணிகளையும் கையாண்டுள்ளனர். படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 21ஆம் தேதியன்று படம் வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[இடைத்தேர்தல்: கடைசி கட்ட கரன்சி நிலவரம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/34)
**
.
**
[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)
**
.
.�,”