தாதா 87 படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கிய ‘தாதா 87’ திரைப்படம் மார்ச் 1ஆம் தேதியன்று வெளியானது. இப்படத்தை கலை சினிமாஸ் நிறுவனத்தின் வேணு ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீ பல்லவி, சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவரது கதாபாத்திரமே தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இந்திய திரையுலக வரலாற்றில் ஒரு ஆண் பெண் வேடத்திலும், ஒரு பெண் ஆண் வேடத்திலும் கூட நடித்துள்ளனர். ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல்முறை. மிகவும் தைரியமாக இந்த வேடத்தில் நடித்திருந்த ஸ்ரீ பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. ஏற்கெனவே தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீ பல்லவிக்கு இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சிறப்பான அறிமுகம் கிடைத்துள்ளது. திருநங்கை வேடத்தில் நேர்த்தியாக நடித்திருந்ததாக சமூக ஊடகங்களில் ஸ்ரீ பல்லவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.�,