}ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனை : மைக்ரோமேக்ஸ்

Published On:

| By Balaji

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பாரத் 2 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. 50 நாட்களில் இந்நிறுவனம் 5 லட்சத்துக்கும் அதிகமான பாரத் 2 மாடல் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பாரத் 2 மாடல் ஸ்மார்ட்போன் 1.3Ghz குவாட் கோர் பிராசசர் திறன் கொண்டது. 512 எம்.பி. ரேம் வசதியும், 4 ஜி.பி ரோம் வசதியும் கொண்டது. மேலும் 4 இன்ச் அகலத் திரை கொண்டுள்ளது. 2 மெகா பிக்சல் பின்பக்க கேமராவும், 0.3 மெகா பிக்சல் முன்பக்க கேமராவும், 1300 எம்.ஹெச் பேட்டரி வசதியும் இதன் மற்ற சிறப்பம்சங்களாகும். இதன் விலை 3,499 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாரத் பெயர் வரிசையில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருவது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரி சுபோதிப் பால் கூறும்போது, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முடிந்ததை மக்களுக்கு அளித்து வருகிறது. பாரத் 2 மாடல் மூலம் ஸ்மார்ட்போன் விற்பனையில் புதிய கட்டத்துக்கு இந்த உலகை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கொண்டு சென்றுள்ளது. குறைந்த நாட்களில், அதாவது 50 நாட்களில் இதுவரை 5,00,000க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளோம்” என்றார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share