ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன்?

public

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களைத் துன்புறுத்துவது ஏன் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரம் நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பெல் ஓட்டலில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் தமிழக அரசிடம் நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்தாண்டு நடந்த போராட்டத்தை வைத்து தற்போது வரை விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாகவும், விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்படுவதாகவும் தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (மே 22) விசாரித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில் அதே கருத்துடைய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக அரசின் நோக்கம் மக்களைப் பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது. இந்த பிரிவுகளின் கீழ் புதிதாகச் சம்மன்களை அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

**வழக்கு முடித்துவைப்பு**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தக் கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேருக்கு தமிழக அரசு வழங்கிய இழப்பீடு, தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் போன்ற நடவடிக்கைகள் தங்களுக்குத் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமித் ஷா பேரம்… ஆடிப் போன ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/22/36)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி](https://minnambalam.com/k/2019/05/21/93)

**

.

**

[எடப்பாடி- தோப்பு வெங்கடாசலம்: நேருக்கு நேர் நடந்தது என்ன?](https://minnambalam.com/k/2019/05/22/43)

**

.

**

[பிரதமர் ப.சிதம்பரம்? மம்தா வலியுறுத்தல்!](https://minnambalam.com/k/2019/05/22/67)

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0