~ஸ்டாலின், தினகரனுக்கு பதவி மேனியா: ஜெயக்குமார்

Published On:

| By Balaji

ஸ்டாலின், தினகரனுக்கு தற்போது பதவி மேனியா உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள டுமீல்குப்பத்தில் குடிசை வீடுகள் அதிகமுள்ளன. இன்று (மே 18) அதிகாலையில் இப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் திடீரென்று தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரண உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், கமல்ஹாசனின் இந்து மதம் தொடர்பான கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எந்த அரசியல்வாதியும் மக்களை நம்பி இருக்க வேண்டும். மதங்களை நம்பி இருக்கக் கூடாது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு வரலாற்று ஆராய்ச்சிகளை செய்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “மக்களைப் பற்றி சிந்திப்பவரைத்தான் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அந்த வகையில் யோசித்ததால்தான் அவர்களுக்கும் அதிமுகவுக்கும் மக்கள் அங்கீகாரம் தொடர்ந்து கிடைத்தது. தற்போது புது மேனியா ஒன்று உருவாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதவி மேனியா. தினகரனுக்கு பதவி மற்றும் பணம் மேனியா உள்ளது. ஸ்டாலின் ஏற்கனவே கணக்கு வாத்தியாராக இருந்துவந்தனர். தற்போது கமல்ஹாசன் வரலாற்று ஆசிரியர் ஆகியுள்ளார்” என்று விமர்சித்தார்.

தேர்தல் ஆணைய விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “தேர்தல் ஆணைய உள் விவகாரங்களில் அரசியல் கட்சிகள் கருத்துகூற முடியாது. நகைச்சுவையாக சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்களுக்கு தேர்தல் வைக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share