ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: அன்புமணி

Published On:

| By Balaji

அதிமுக ஆட்சி 2 ஆண்டுகளுக்கு தொடருமென்றும், ஸ்டாலினுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று நடைபெறும் இறுதிகட்ட மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 4 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் நத்தமேடு வாக்குச்சாவடியை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக தோல்வி பயத்தில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து மறு வாக்குப்பதிவு நடக்கச் செய்திருக்கிறது. 18ஆம் தேதி வாக்குப்பதிவின்போது வெளியூரில் இருந்தவர்களும் இப்போது வந்துவிட்டார்கள்.

இந்த காலத்தில் எங்காவது வாக்குசாவடியை கைப்பற்ற இயலுமா? இந்த 8 வாக்குச்சாவடிகளிலும் 100 விழுக்காடு வாக்குகளும் பாமகவுக்கு மட்டும்தான் விழும். தருமபுரி மக்களவைத் தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றி பெறும். நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். 38 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். 22 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும்” என்றார்.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று தினம்தோறும் கனவு கண்டு கொண்டிருக்கிறார் என்ற அன்புமணி, “23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியவே மாலை ஆகிவிடும். ஆனால் அன்று மதியமே தான் முதலமைச்சர் ஆகிவிடுவேன் என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பதவிவெறி வந்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் வளர்ச்சியைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ, சுகாதாரத்தைப் பற்றியோ ஸ்டாலின் பேசவில்லை. ஆனால் என்னை, ராமதாஸை, முதல்வர்-துணை முதல்வரை, பிரதமரைப் பற்றி அவதூறாக, கொச்சையாக, தனிநபர் விமர்சனம் செய்து பேசினார். ஸ்டாலினுக்கு நிச்சயமாக மக்கள் இந்தத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். அதிமுக ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும்” என்றார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)

**

.

**

[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share