~‘ஸ்கெட்ச்’ பட நடிகர் கிளப்பிய பாலியல் சர்ச்சை!

public

பிரபல வில்லன் நடிகரான ரவி கிஷன், நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக பல காலமாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட நடிகைககளில் சிலர் மட்டுமே இலைமறை காயாக அதைத் தெரிவிக்க பலர் அதை வெளியில் சொல்வது இல்லை.

அந்த வரிசையில் நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் பாலியல் தொல்லை அனுபவிப்பதாக தற்போது பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார் நடிகர் ரவி கிஷன்.

போஜ்புரி நடிகரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். போஜ்புரி மட்டுமல்லாது இந்தியிலும் பிஸியான நடிகரான இவர், தெலுங்கில் சுப்ரீம், ஒக்க அம்மாயி தப்பா, லை, எம்எல்ஏ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வந்த ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது தெலுங்கில் சாக்‌ஷ்யம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலியல் தொல்லை குறித்து மீடியா ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,“படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகப் பலரும் பேசுகின்றனர். ஆனால் இதே காரணத்துக்காக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆம், புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்களும் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இது சினிமாவில் சகஜமாக நடக்கிறது” எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ரவிகிஷன்.

ஆனாலும் இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சினிமாவுக்கு வந்த நேரத்தில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாகக் கூறியிருக்கிறார். அதைப்போல நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் பாலியல் தொல்லையில் சிக்கியதாகத் தெரிவித்து இருந்தார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0