[ஷீரடி விமான நிலையத்துக்கு அனுமதி!

public

ஷீரடி விமான நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றது என கூறி விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலுக்குத் தினமும் சுமார் 60,000 பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு வருவதற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. எனவே, விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்த மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டது. இதையடுத்து, ஷீரடியை அடுத்துள்ள கோபர்கான் தாலுக்காவில் அகமது நகர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இதற்கு வரையறுக்கப்பட்ட அனுமதி 2011 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. ஷீரடி விமான நிலையத்தில் 2,500 மீட்டர் நீளத்துக்கு விமான ஓடுதளப் பாதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கட்டுமானம் சரியான முறையில் இல்லை எனக் கூறி பொதுமக்களுக்கான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது விஜபிக்கள் மற்றும் இதர சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி மகாராஷ்டிர அரசு 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில், விமான நிலையத்தின் கட்டுமானம் முடிந்துவிட்டதாகவும், கோட் 3சி ரக விமானங்களை இயக்கும் அளவுக்கு மேம்பட்டு உள்ளது. அதனால், இந்த விமான நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றது என விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பையிலிருந்து ஷீரடிக்கு பேருந்தில் செல்ல ஐந்து மணி நேரம் ஆகும். இனிமேல் விமானத்தின் மூலம் பயண நேரம் 40 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *