கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற்று உடன் மாணவர்கள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களை நோக்கி அடுத்த நிமிடம் ஓடி விடுவார்கள். வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற அத்தனை பதட்டமும், பரபரப்பும் மாணவர்களிடம் காணப்படும். தற்போது, மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலம் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறைக்கு வந்து விட்டது.
பிளஸ் 2 மாணவர்கள் அசல் சான்றிதழ் பெற வரும் போது அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு வருமாறு பள்ளிகள் மூலம் அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்தோர், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லை என்றாலும்,வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகி பெற்று கொள்ளவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த பதிவு பணி 15 நாட்கள் வரை நடைபெறும். ஆனால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கபட்ட முதல் நாளே பதிவு மூப்பு நாளாக அளிக்கபடுகிறது. இணையதளத்தில் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வாய்ப்பும் வழங்கபட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மூலம், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கி விட்டது. இதை அடுத்து மாணவ மாணவிகள் தங்கள் பதிவை செய்து கொண்டு வருகின்றனர். வரும் ஜூலை 4ம் தேதி வரை மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
�,