|வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு புதிய திட்டம்!

Published On:

| By Balaji

c2030ஆம் ஆண்டுக்குள் புதிதாக ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வெகுஜன தொழில்முனைவுக் கூட்டணி (GAME) திட்டத்தை இந்திய மற்றும் வெளிநாட்டுப் பங்குதாரர்கள் இணைந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்தின்படி இந்தியாவில் தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தப் பெரும் திட்டத்தின் வழியாக 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி புதிய தொழில்முனைவோரையும், ஐந்து கோடி புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி தொழில்முனைவோரில் 50 விழுக்காடு அளவுக்குப் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக முதற்கட்டமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.100 கோடியைச் செலவிடவுள்ளோம். இந்தத் தொகையைப் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வழங்கவுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் கே.பி.கிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அடிப்படைக் கருத்துகளை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அளிக்கும். பெரும் தொழில் முனைவு உருவாவதற்கான சூழல் தற்போது இல்லாமல் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு GAME உடனடித் தீர்வை தரும்” என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share