{வேலூர்: வேட்பாளர்களின் சொத்து மதிப்பு உயர்வு!

Published On:

| By Balaji

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 16ஆம் தேதி ரத்துசெய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 11ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்நிலையில் வேலூர் தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் கையிருப்புப் பணம் தவிர்த்து ரூ.1.74 கோடி உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில், தனது கையிருப்பில் ரூ.16.93 கோடி இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இப்போது அத்தொகை ரூ.18.13 கோடியாக உயர்ந்துள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தனது சொத்துகளில் சிலவற்றை விற்பனை செய்துள்ளார். அதனால் அவருக்கு ரூ.1 கோடி வரையில் கிடைத்துள்ளது. அவரது அசையா சொத்துகளின் மதிப்பு இந்த நான்கு மாதங்களில் அதிகரித்துள்ளன. வேலூர் கனரா வங்கியில் ஆனந்த் புதிதாகத் தொடங்கிய தேர்தல் கணக்கில் ரூ.70.17 லட்சம் உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் ரத்தாவதற்கு முன்னதாகத் திறக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கில் அப்போது ரூ.30.10 லட்சம் இருந்தது.

கதிர் ஆனந்த் மற்றும் அவரது மனைவியின் கையிருப்பில் உள்ள பணத்தின் அளவும் ரூ.7.43 லட்சத்திலிருந்து ரூ.28.13 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாகக் கதிர் ஆனந்த், அவரது மனைவி பெயரில் ரூ.58.75 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தனது தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share