வேலூர்: வாக்குப் பதிவு ஆரம்பமானது!

public

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு ஆரம்பமானது.

ஏப்ரல் மாதம் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 5) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிகிறது. தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பாக டி.எம்.கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி மற்றும் சுயேச்சைகள் உள்பட 28 வேட்பாளர்கள் உள்ளனர்.

10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த நிலையில் வேலூர் தொகுதியில் வன்னியர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாக ஒரு தகவல் சென்றுள்ளது. அதில், “வன்னியர் வாக்கு வன்னியருக்குத்தான் போக வேண்டும். நீங்கள் எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுச் செல்லுங்கள். தேர்தலில் அனைவரும் கதிர் ஆனந்துக்குதான் ஓட்டுபோட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள். இந்தத் தகவலைக் கேட்டு துரைமுருகன் தரப்பு தற்போதே உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டது.

இதற்கிடையே பிரச்சாரத்தை முடித்துவிட்டுச் செல்லும்போது ஏ.சி.சண்முகத்தைப் பார்த்து, ‘நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரோ, தான் மட்டும்தான் செலவிடுகிறேன் என்றும் அமைச்சர்கள் தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை மட்டும்தான் பார்த்துக்கொள்கிறார்கள் என்று முதல்வரிடம் வருத்தப்பட்டிருக்கிறார். மேலும் ஏ.சி.சண்முகம் அதிக அளவில் கரன்சியை இறக்குவார் என்ற எதிர்பார்த்த அதிமுகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகவும் கூறுகிறார்கள்.

சிறுபான்மையினர் வாக்குகளைப் பொறுத்தவரை பெருமளவில் திமுகவுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய சூழலில் ஏ.சி.சண்முகம் தரப்பிலிருந்து ரூ.300, திமுக தரப்பிலிருந்து ரூ.200 என்ற அளவில் வாக்காளர்களுக்கு வைட்டமின் ‘ப’ விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் தொகுதியில் வலம் வருபவர்கள்.

**தேர்தல் ஏற்பாடுகள்**

தொகுதி முழுவதும் வாக்குப் பதிவுக்காக 1,553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதற்றமானவை என்று கண்டறியப்பட்ட 179 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினருடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும், அந்த வாக்குச் சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 3,752 வாக்குப் பதிவு எந்திரங்கள் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் 7,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்பட்டு ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்படவுள்ளது. வரும் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

**

மேலும் படிக்க

**

**[சேரனை மீட்க கிளம்பும் இயக்குநர்கள்: மன்னிப்பு கேட்ட சரவணன்](https://minnambalam.com/k/2019/08/04/19)**

**[பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்](https://minnambalam.com/k/2019/08/04/40)**

**[வெள்ளைக்கொடியுடன் வந்து பிணங்களை எடுத்துச்செல்லுங்கள்: இந்தியா!](https://minnambalam.com/k/2019/08/04/29)**

**[குடும்பங்களைக் குறிவைக்கும் சசிகுமார்](https://minnambalam.com/k/2019/08/04/10)**

**[தினகரனின் புது எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/04/43)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *