வேலூர்: அதிமுக வேட்பாளரின் மனு நிறுத்தி வைப்பு!

Published On:

| By Balaji

வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி நடக்க இருக்கும் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்பட 50 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று (ஜுலை 19) ஆம் தேதி வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் முன்னிலையில் வேட்பு மனு பரிசீலனை இன்று தொடங்கியது.

அப்போது ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோது, ‘யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா?’ என்று கேட்டார் கலெக்டர்.

அப்போது திமுக தரப்பில் இருந்து, “வேட்பாளர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக் கட்சியின் தலைவர். அவர் அதிமுக என்ற கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அப்படியெனில் அவர் அதிமுக என்ற கட்சியின் உறுப்பினராகியிருக்கிறாரா? அதிமுக வேட்பாளர் என்பதற்கான அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ கடிதம், உறுப்பினர் சீட்டு ஆகிய ஆவணங்கள் வேட்பு மனுவில் இருக்கிறதா?” என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

அதைக் கேட்ட கலெக்டர், வேட்பு மனுவை எடுத்து ஓரமாக வைத்துவிட்டார். உடனே அதிமுக தரப்பில் பரபரப்பு அதிகரித்தது. கூட்டணி என்ற அடிப்படையில் அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ கடிதம் ஏ.சி. சண்முகத்துக்காக கொடுக்கப்பட்டதா, அது வேட்பு மனுவோடு சேர்க்கப்பட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இதற்கிடையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுவையும் ஏற்கக் கூடாது என்று சில சுயேச்சைகள் இப்போது எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

**

மேலும் படிக்க

**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share